புதுடில்லி : நவம்பர் 8 ம் தேதி நள்ளிரவு முதல் வாபஸ் பெறப்பட்ட ரூ.1000 நோட்டுகள், புதிய வடிவில் மீண்டும் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக மத்திய பொருளாதார விவகார செயலாளர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.
கறுப்பு பணத்தை வெளி கொண்டு வருவதற்காகவும், ஒழிப்பதற்காகவும் நவம்பர் 8 ம் தேதி நள்ளிரவு முதல் ரூ.500, 1000 நோட்டுக்களை வாபஸ் பெறுவதாக மத்திய அரசு அதிரடியாக அறிவித்தது. இதனையடுத்து நேற்று வங்கிகள் மற்றும் ஏடிஎம்.,கள் மூடப்பட்டன. இன்று (நவம்பர் 10) புதிய ரூ.500 மற்றும் 2000 நோட்டுக்கள் அறிமுகத்துடன் வங்கிகள் மீண்டும் திறக்கப்பட்டன. மக்கள், வங்கிகளில் விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து, அத்துடன் 16 அடையாள சான்றுகளில் ஏதாவது ஒன்றின் ஜெராக்ஸ் இணைத்து தங்களிடம் உள்ள பழைய ரூ.500 மற்றும் 1000 நோட்டுக்களை பெற முடியும் என தெரிவிக்கப்பட்டது. மக்கள், ரூ.500 மற்றும் 1000 நோட்டுக்களை மாற்றிக் கொள்ள வங்கிகளில் குவிந்தனர்.
நிதித்துறை செயலாளர் தகவல்:
இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய மத்திய பொருளாதார விவகார செயலாளர் சக்திகாந்ததாஸ், வாபஸ் பெறப்பட்ட ரூ.1000 நோட்டுக்கள் புதிய வடிவில் சில மாதங்களில் மீண்டும் அறிமுகம் செய்யப்படும். அனைத்து ரூபாய் நோட்டுக்களிலும் மாற்றம் கொண்டு வரப்படும். அதே சமயம், ஏற்கனவே புழக்கத்தில் இருக்கும் பழைய ரூபாய் நோட்டுக்களும் செல்லும். புதிதாக வெளியிடப்பட்டுள்ள ரூ.2000 நோட்டுக்களின் பயன்பாடு தொடர்ந்து கண்காணிக்கப்படும்.
2 நாட்களுக்கு பிறகு மீண்டும் நாளை ஏடிஎம்.,க்கள் திறக்கப்படும் போது ரூ.100 நோட்டுக்கள் மட்டுமே கிடைக்கும். ரூ.2000 நோட்டுக்கள் கிடைக்காது. ரூ.2000 நோட்டுக்களின் வடிவத்திற்கு ஏற்ப ஏடிஎம் இயந்திரங்கள் மாற்றி அமைக்கப்பட்டு, அதன் பிறகு ஏடிஎம்.,களில் ரூ.2000 நோட்டுக்கள் கிடைக்கும் என்றார். வங்கி அதிகாரிகள் உரிய ஆவணங்களுடன் பணத்தை எடுத்துச் செல்லுமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.