புதுடில்லி : சில்லறைத் தட்டுப்பாட்டை பயன்படுத்தி, பத்து ரூபாய் போலி நாணயங்கள் புழக்கத்தில் உள்ளதாகக் கூறப்படுவதை ரிசர்வ் வங்கி மறுத்துள்ளது.
ரூ.500, 1,000 நோட்டுக்களை வாபஸ் பெறுவதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து மற்ற கரன்சி நோட்டுகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சில்லறைத் தட்டுப்பாட்டைப் போக்க அதிக அளவில் பத்து ரூபாய் நாணயங்கள் புழக்கத்தில் விடப்பட்டுள்ளன. இந்நிலையில் பத்து ரூபாய் நாணயங்களில் போலியானவை வருவதாக ஒருசிலர் வதந்திகளைப் பரப்பி வருவதாகக் கூறப்படுகிறது. இது குறித்து விளக்கமளித்துள்ள ரிசர்வ் வங்கி, ‛வதந்திகளை நம்பாமல் பத்து ரூபாய் நாணயங்களைத் தயங்காமல் ஏற்றுக்கொள்ளலாம்' எனக் குறிப்பிட்டுள்ளது.
ஒவ்வொரு சமயத்திலும் வெளியிடப்படும் நாணயங்களில் அவ்வப்போது உள்ள சமூக, பொருளாதார, பண்பாட்டு நிலைகளை வெளிக்காட்டும் வகையிலான அடையாளங்கள் இடம்பெறுவது வழக்கம் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
English Summary:
Using the retail shortage, ten-rupee fake coins is in circulation, the Reserve Bank has denied the claim.