கச்சத்தீவு அருகே சனிக்கிழமை மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேசுவரம் மீனவர்கள் 11 பேரையும் டிசம்பர் 2 ஆம் தேதி வரை சிறைக்காவலில் வைக்க அந்நாட்டு நீதிமன்றம் ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
ராமேசுவரம் பகுதியிலிருந்து சனிக்கிழமை காலை மீன்பிடிக்க சேகர், கிளவச்சாமி ஆகியோருக்குச் சொந்தமான படகில் ஸ்டாலின், குமார், விசு, முருகன், கருமலையான், வீரணன், ராஜாகோபால், ஜோதிமுத்துராமலிங்கம், முத்துக்குமார், முத்துநாதன், முத்துக்கிருஷ்ணன் ஆகிய 11 மீனவர்கள் சென்றனர். இவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது அவ்வழியாக வந்த இலங்கை கடற்படையினர் இவர்களை கைது செய்தனர்.பின்னர் காங்கேசன்துறை போலீஸாரிடம் ஞாயிற்றுக்கிழமை ஒப்படைத்தனர்.
அங்கு எல்லை தாண்டி மீன்பிடிக்க வந்ததாக மீனவர்கள் மீது வழக்குப் பதிந்து ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அங்கு விசாரணை செய்த நீதிபதி சபேசன், மீனவர்களை டிசம்பர் 2 ஆம் தேதி வரை சிறைக்காவலில் வைக்க உத்தரவிட்டார். அதன்படி 11 மீனவர்களும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.
English Summary : Rameswaram fishermen arrested by Sri Lankan Navy custody until Dec. 2 to 11 people.Fellowship at the Saturday fishing while the Sri Lankan Navy arrested Rameswaram fishermen 11 persons on December 2 until the custody and place the Iraqi court on Sunday ordered.