சென்னை மவுலிவாக்கத்தில் 11 மாடி கட்டடம் இடிக்கப்படும் நேரம் மாற்றப்பட்டுள்ளது என காவல்துறை அறிவித்துள்ளது. ஒரு மணி நேரம் தாமதாக பிற்பகல் 3.30 மணிக்கு கட்டிடம் தகர்க்கப்படும் என காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. கட்டடத்தை தகர்ப்பதற்கான வெடி பொருட்கள் பிற்பகல் 2.30 மணிக்கு கட்டிடம் இடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது கட்டடம் ஒரு மணி நேரம் தாமதமாக இடிக்கப்படுகிறது.
கடந்த 2014 ஜூன் 28ம் தேதி மாலையில் சென்னையை அடுத்த மவுலிவாக்கத்தில் கட்டப்பட்டுக்கொண்டிருந்த 11 மாடிக் கட்டடங்களில் ஒன்று இடிந்து தரைமட்டமானது. இந்த விபத்தில் இடிபாடுகளில் சிக்கிய 61 பேர் உயிரிழந்தனர். இதன் அருகில் இருந்த மற்றொரு 11 மாடிக் கட்டடமும் பாதுகாப்பற்ற முறையில் இருப்பது தெரியவந்ததால், அதனை இடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இதன்படி, இந்தக் கட்டடம் பலத்த பாதுகாப்புடன் இன்று பிற்பகலில் இடிக்கப்படுகிறது. கட்டடம் அதே இடத்தில் உள்நோக்கி விழும் வகையில், வெடிமருந்துகள் மூலம் நவீன தொழில்நுட்பத்துடன் இடிக்கப்படவுள்ளது.
இதற்காக கட்டடத்தின் உள்ளே 150 இடங்களில் தூண்களில் துளையிடப்பட்டு 75 கிலோ அளவிற்கு வெடி பொருட்கள் நிரப்பப்பட்டுள்ளன. வெடிமருந்துகள் ஒன்றுடன் ஒன்றாக வயர்கள் மூலம் இணைக்கப்பட்டுள்ளன. ரிமோட்கள் மூலம் வெடிபொருட்களை வெடிக்கச் செய்வார்கள். முதலில் தரை தளத்தில் தொடங்கி 5 வது தளம் வரை நிரப்பப்பட்டுள்ள வெடி பொருட்கள் வெடித்து கட்டடம் தரை மட்டமாகும்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மவுலிவாக்கம் பகுதி பள்ளிகளுக்கு செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் விடுமுறை விடப்பட்டுள்ளது. கட்டடத்தின் அருகே இருக்கும் தனியார் நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இடிக்கப்படும் கட்டடங்களுக்கு அருகில் முன்னெச்சரிக்கையாக 10 தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயார்நிலையில் நிறுத்தவைக்கப்படவுள்ளன. இதற்காக மவுலிவாக்கம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இன்று நண்பகல் 12 மணி முதல் கட்டடத்தை இடித்து முடிக்கும் வரை மின்தடை அறிக்கப்பட்டுள்ளது.
கட்டடம் 3.30 மணியளவில் இடித்து தரைமட்டமாக்கப்படும் என்றும், இடிபாடுகள் உள் நோக்கியே விழும் என்பதால் அருகில் உள்ள கட்டடங்களுக்கு பாதிப்பு வர வாய்ப்பு இல்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கட்டடம் 10 நொடிகளில் தரைமட்டமாகும் என்றும் அப்போது எழும் புகை மண்டலத்தை கட்டுப்படுத்தவும், தண்ணீர் பீய்ச்சியடிக்கவும் தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் உள்ளன. கட்டடத்தை சுற்றியும் 200 மீட்டர் தொலைவிற்கு ஆபத்தான பகுதி என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கட்டடம் இடிக்க தயார் நிலையில் உள்ளது. ஆட்டோக்கள் மூலம் அறிவிப்பு செய்யப்பட்டு வருகிறது. இடிக்கப்படும் கட்டடத்தின் அருகில் உள்ள வீடுகளில் யாரேனும் வசிக்கிறார்களாக என்பதை அறிய வீடு வீடாக சென்று அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அந்த பகுதியில் 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஆபத்தான பகுதிகள் என்று அறிவிக்கப்பட்ட இடங்களில் சிகப்பு கொடிகள் கட்டப்பட்டுள்ளன. போரூரில் இருந்து குன்றத்தூர் செல்லும் வாகனங்கள் குமணன் சாவடி, மாங்காடு வழியாக செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளன. குன்றத்தூர்-போரூர் செல்லும் வாகனங்கள் பாய்கடையில் இருந்து பட்கூட்ரோடு வழியாக செல்லவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
Wednesday 2 November 2016
Home »
» எல்லாம் ரெடி... மவுலிவாக்கம் 11 மாடிக் கட்டடம் 3.30 மணிக்கு தரைமட்டமாகும்- சிஎம்டிஏ தகவல்