புதுடில்லி : நடப்பு ஆண்டில் 120 நீதிபதிகள் நியமிக்கப்பட்டிருப்பதாக சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நீதிபதிகள் நியமனம் தொடர்பான வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி டி.எஸ்.தாகூர், நீதிபதிகள் நியமன விவகாரத்தில் மத்திய அரசு வேண்டுமென்றே தாமதம் காட்டி வருவதாக குற்றம்சாட்டி இருந்தார். நீதிபதியின் இந்த கருத்தை மறுத்த மத்திய அரசு, நீதிபதிகள் நியமனம் பற்றிய புள்ளி விபரங்கள் அளித்துள்ளது. அதில், நடப்பு ஆண்டில் மட்டும் 120 ஐகோர்ட் நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் நவம்பர் வரை 120 நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், கடந்த 25 ஆண்டுகளில் தற்போதே அதிக அளவில் நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொலீஜியம் குழுவின் பரிந்துரையை மதித்து, ஐகோர்ட் நீதிபதிகள் நியமனம் வெளிப்படையாக நடந்துள்ளது. புள்ளி விபரங்கள் உண்மையான நிலவரத்தை சொல்லும் என மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
English Summary:
In the current year, the government in the Supreme Court has appointed 120 judges.