சென்னை: டிசம்பர் 15ம் தேதி வரை பழைய 500 ரூபாய் நோட்டை சில சேவைகளுக்கு மட்டும் பயன்படுத்திக் கொள்ள மத்திய நிதியமைச்சகம் சலுகை அளித்துள்ளது. அப்படி சலுகை அளிக்கப்பட்டுள்ள சேவைகள்
குறித்த விவரம்:
குறித்த விவரம்:
- டோல் கேட்டுகள் மற்றும் பெட்ரோல் பங்குகள்
- மத்திய, மாநில அரசு, நகராட்சி, ஊராட்சிப் பள்ளிகளில ரூ. 2000 வரை கல்விக் கட்டணம் செலுத்தப் பயன்படுத்தலாம்.
- மத்திய, மாநில அரசுக் கல்லூரிகளில் கட்டணம் செலுத்த பயன்படுத்தலாம்.
- ரூ. 500 வரைக்கும் செல்போன்களில் டாப்அப் செய்து கொள்ள பயன்படுத்தலாம்.
- நுகர்வோர் கூட்டுறவுக் கடைகளில் உரிய அடையாள அட்டைகளைக் காட்டி ரூ. 5000 வரை பொருட்களை வாங்கும்போது இந்த பழைய நோட்டுக்களைப் பயன்படுத்தலாம்.
- மத்திய, மாநில அரசுகள் நடத்தும் பால் பூத்துகளில் பால் வாங்க பயன்படுத்தலாம்.
- குடிநீர், மின்சாரக் கட்டணத்தை செலுத்த பயன்படுத்தலாம்.
- அரசு மருத்துவமனைகள், மருந்தகங்களில் பயன்படுத்தலாம்.
- மருத்தவர்களின் சீட்டுடன் அனைத்து மருந்துக் கடைகளிலும் மருந்து வாங்க பயன்படுத்தலாம்
- ரயில்வே டிக்கெட் கவுண்டர்கள், அனைத்து அரசு போக்குவரத்துக் கழக கவுண்டர்களில் டிக்கெட் வாங்கப் பயன்படுத்தலாம்.
- விமான நிலையங்களில் டிக்கெட் வாங்க பயன்படுத்தலாம்.
- மயானங்கள் இடுகாடுகளில் பயன்படுத்தலாம்.
- காஸ் சிலிண்டர்களை வாங்கப் பயன்படுத்தலாம்.
- ரயில்களில் உள்ள உணவகங்களில் பயன்படுத்தலாம்.
- புறநகர் ரயில்கள் மற்றும் மெட்ரோ ரயில்களில் டிக்கெட் வாங்க பயன்படுத்தலாம்.
- இந்திய தொல்பொருள் ஆய்வு நிறுவனத்தால் பராமரிக்கப்படும் நினைவிடங்களில் கட்டணம் செலுத்த பயன்படுத்தலாம் (மாமல்லபுரம் போல)
- மத்திய அரசு, மாநில அரசுகள் விதிக்கும் கட்டணங்கள்,வரிகள், அபராதங்கள் உள்ளிட்டவற்றைக் கட்ட பயன்படுத்தலாம்.
- கோர்ட் கட்டணம் செலுத்தப் பயன்படுத்தலாம்.
- அரசு நிறுவனங்கள் நடத்தும் விற்பனை நிலையங்களில் விதைகள் வாங்க பயன்படுத்தலாம்.
English Summary:
The union govt has permitted to use old 500 rupees currency notes in some utility services till December 15. Here is the list of the services.