புதுடில்லி : டில்லி - ஹவுரா, டில்லி - மும்பை இடையே மணிக்கு 160 கி.மீ., வேகத்தில் செல்லும் கதிமான் அதிவேக எக்ஸ்பிரஸ் ரயிலை இயக்க ரயில்வே திட்டமிட்டுள்ளது.
ரயில்வே திட்டம் :
டில்லி-ஹவுரா மற்றும் டில்லி-மும்பை வழியாக செல்லும் ரயில்களின் வேகத்தை கூட்டி, ரயில்களை மணிக்கு 160 கி.மீ., வேகத்தில் இயங்க வைக்கும் முயற்சியில் ரயில்வே இறங்கியுள்ளது. ரயில்களின் வேகத்தைக் கூட்டுவதன் மூலம், பயண நேரம் குறைந்து, கூடுதல் ரயில்களை இயக்க முடியும். பயணிகள் சிரமப்படாமல் பயணிக்க முடியும்.
10,000 கோடி :
இத்திட்டதிற்கு 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவாகும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டம் வெற்றி பெற்றால் ஹவுரா - சென்னை, டில்லி - சென்னை, சென்னை - மும்பை ஆகிய வழித்தடத்திலும் இதனை நடைமுறைப்படுத்த ரயில்வே திட்டமிட்டுள்ளது.
இந்தியா சில மாதங்கள் முன்பு மணிக்கு 160 கி.மீ., வேகத்தில் செல்லும் அதிவேக கதிமான் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை வெற்றிகரமாக இயக்கியது குறிப்பிடத்தக்கது.