பெங்களூரு: கன்னட பட சூட்டிங்கில், நீர்த்தேக்கத்தில் குதித்த இரண்டு ஸ்டண்ட் கலைஞர்கள் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
கர்நாடக மாநிலம், ராம்நகர் மாவட்டம் மாகடி தாலுகாவில் உள்ள திப்பகொண்டனஹள்ளி நீர்த்தேக்கம் உள்ளது. இங்கு காலை 11 மணியளவில், துனியா விஜய் என்பவர் கதாநாயகனாக நடிக்கும் மாத்திக்குடி கன்னட படத்தின் கிளைமாக்ஸ் காட்சி படமாக்கப்பட்டது. கரையோரத்தில் பல முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்ட பின்னர், ஹெலிகாப்டரில் இருந்து துனியா விஜய் மற்றும் அனில், உதய் என்ற சினிமா ஸ்டண்ட் மாஸ்டர்கள் நீர்த்தேக்கத்திற்குள் குதிப்பது போன்ற காட்சி படமாக்கப்பட்டது.
கவச உடையில்லை:
விஜய் மட்டும் சட்டை அணிந்திருந்தார். மற்ற இருவரும் சட்டை இல்லாமல் இருந்தனர் அணைக்குள் குதித்த மூன்று பேரில் விஜய் கரையேறினார். மற்ற இருவரும் நீரில் தத்தளித்தனர். அவர்களை காப்பாற்ற படகில் பலர் சென்றனர். ஆனால், படகு பாதி வழியில் பழுதாகி நின்றது. இதனால், இருவரும் நீரில் மூழ்கியிருக்கலாம் என அச்சம் உண்டாகியுள்ளது. பல மணி நேரமாகயும் அவர்களது உடல் இதுவரை கிடைக்கவில்லை. தொடர்ந்து தேடுதல் பணி நடைபெற்று வருகிறது. திரைப்பட குழுவினர் மீது போலீசார் கிரிமினல் வழக்குப்பதிவு செய்துள்ளனனர்.