நாடு முழுவதிலும் உள்ள 24 ஐகோர்ட்களில் 43 சதவீதம் நீதிபதிகள் பணியிடங்கள் காலியாக உள்ளதாக சட்டத்துறை அமைச்சக புள்ளி விபர கணக்கு தெரிவிக்கிறது.
சட்ட அமைச்சகம் தகவல் :
நீதிபதிகள் நியமன விவகாரத்தில் வகுக்கப்பட வேண்டிய விதிகள் தொடர்பாக மத்திய அரசுக்கும், சுப்ரீம் கோர்ட்டிற்கும் இடையே குழப்பம் நிலவி வருகிறது. இந்நிலையில் நாடு முழுவதிலும் உள்ள ஐகோர்ட்களில் காலியாக உள்ள நீதிபதிகள் பணியிடங்கள் குறித்த விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. 24 ஐகோர்ட்களில், மொத்தமுள்ள 1079 நீதிபதி பணியிடங்களில் 464 காலியாக உள்ளது.
காலி பணியிடங்கள் விபரம் :
அதிகபட்சமாக ஆந்திராவில் அதிகமாக நீதிபதி பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கு அடுத்தபடியாக அலகாபாத்தில் 83 நீதிபதி பணியிடங்களும், பஞ்சாப் மற்றும் அரியானா ஐகோர்ட்களில் 39 நீதிபதி பணியிடங்களும், கர்நாடகாவில் 36 நீதிபதி பணியிடங்களும் காலியாக உள்ளன. கடந்த வாரம் நடந்த வழக்கு விசாரணையின் போது நீதிபதி காலியிடங்களை, சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி டி.எஸ்.தாகூர் தலைமையிலான பெஞ்ச் சுட்டிக்காட்டி மத்திய அரசுக்கு தனது கண்டனத்தை தெரிவித்தது.
Wednesday 2 November 2016
Home »
» ஐகோர்ட்களில் 43 சதவீதம் நீதிபதி பணியிடங்கள் காலி