தமிழகம் முழுவதும் வரும் 25 -ஆம் தேதி, வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக கூட்டுறவு வங்கி ஊழியர்கள் அறிவித்துள்ளனர்.
இதுகுறித்து, கூட்டுறவு வங்கி ஊழியர் சம்மேளத்தின் மாநில பொதுச் செயலாளர் பி.பாலகிருஷ்ணன் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியது:
பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு, பொது -தனியார் துறை வங்கிகள், அயல்நாட்டு வங்கிகள், கிராமிய வங்கிகள், நகர கூட்டுறவு வங்கிகள், மாநில தலைமை கூட்டுறவு வங்கிகளுக்கு மட்டுமே முறைப்படி அறிவிக்கப்பட்டது.
தமிழகத்தில் பெரும்பான்மையாக விளங்கும் மத்திய கூட்டுறவு வங்கிகள், தொழில் கூட்டுறவு வங்கிகள், தொடக்க கூட்டுறவு வேளாண்மை கடன் சங்கங்களுக்கு, ரிசர்வ் வங்கி இதுதொடர்பாக எந்த அறிவிப்பும் கொடுக்கவில்லை.
இந்தக் கூட்டுறவு வங்கிகள் அனைத்தும் விவசாயிகள், கைத்தறி நெசவாளர்கள், நூற்பாலைகள் உள்ளிட்டவற்றுக்கு கடன்களை வழங்கி வருகின்றன. இந்த நிலையில், கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கி உதாசீனப்படுத்தியுள்ளதை கண்டிக்கிறோம். ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கையைக் கண்டித்து, வரும் 22 -ஆம் தேதி, அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் கூட்டுறவு வங்கி ஊழியர்கள் தர்னா போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் வரும் 25 -ஆம் தேதி, அனைத்து வங்கி ஊழியர்களும் பங்கேற்கும் ஒரு நாள் வேலைநிறுத்தம் நடைபெறும் என்றார் அவர்.
English Summary : On the 25 th in Tamil Nadu, the cooperative bank employees announced they would go on a strike.Old Rs 500 and Rs 1,000 notes that the notice is invalid, Public / Private sector banks, foreign banks, rural banks, urban cooperative banks, state-led co-operative banks only formally announced.