மத்திய அரசு புதிதாக வெளியிட்டுள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
டெல்லியைச் சேர்ந்த வழக்கறிஞர் எம்.எல். ஷர்மா இதற்கான மனுவினை தாக்கல் செய்துள்ளார். அதில், புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை தண்ணீரில் நனைத்தால் சாயம் போவதாகக் குறிப்பிட்டுள்ளார். எனவே, அவற்றை வெளியிட தடை விதிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
இதற்கு பதில் அளித்த தலைமை நீதிபதி டி.எஸ். தாகூர், நீதிபதி அனில் ஆர்.தவே ஆகியோர் அடங்கிய அமர்வு, நீங்கள் ஏன் ரூபாய் நோட்டுக்களை தண்ணீரில் நனைக்கிறீர்கள் என கேள்வி எழுப்பியது.
எனினும், இந்த மனுவை விசாரணைக்கு ஏற்பதாகவும், இதுதொடர்பான மற்ற வழக்குகள் வரும் 25ம் தேதி விசாரணைக்கு வர உள்ளதால் அன்றைய தினமே, இதனையும் விசாரிப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
English Summary:
2 thousand rupees notes newly issued central government demanding that the ban has been filed public interest litigation in the Supreme Court.