ஸ்ரீநகர் : காஷ்மீரில் 300 பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாகவும், எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதி வழியாக ஊடுருவிய இவர்கள் மிகப் பெரிய அச்சுறுத்தலாக இருப்பதாகவும் காஷ்மீர் மாநில டிஜிபி கே.ராஜேந்திரா தெரிவித்துள்ளார்.
காஷ்மீரின் உண்மை நிலை :
காஷ்மீர் முதல்வர் மெகபூபா முப்தி தலைமையில் நடந்த கூட்டத்தில் பேசிய டிஜிபி, எல்லையில் தொடர்ந்து நடக்கும் ஊடுருவலே, காஷ்மீரில் நிலவும் பதற்றம் நிலைக்கு காரணம். பர்கன் வானி கொல்லப்பட்டதன் விளையாக 4 மாதங்களாக நிலவி வரும் பதற்ற நிலையால் காஷ்மீரின் நிலை மிகவும் பலவீனமடைந்துள்ளது.
தற்போது 250 முதல் 300 பயங்கரவாதிகள் காஷ்மீருகுள் ஊடுருவி, தயார் நிலையில் உள்ளனர். இதனால் அடுத்த 2 முதல் 3 மாதங்களுக்கு நாம் செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து திட்டம் வகுக்க வேண்டும். தற்போது நடந்து வரும் போராட்டங்களால் சுமார் 70 கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன. 53 முதல் 70 கட்டிடங்கள் மொத்தமாக சேதப்பட்டுள்ளன. சாதாரண நிலையை திருப்பிக் கொண்டு வருவதற்கு படைகள் முக்கியத்துவம் அளித்து வருகின்றன என்றார்.
இக்கூட்டத்தில் துணை கமிஷனர்கள், எஸ்எஸ்பி.,க்கள், மக்கள் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.