ஊட்டி : நீலகிரி மாவட்டம் ஊட்டி குருத்துகுளி அருகே உள்ள கின்னஸ் பூங்கா தற்போது பராமரிப்பு இல்லாமல், அங்கு நடப்பட்ட மரக்கன்றுகள் வீணாகி முட்புதராக காட்சியளிக்கிறது. ஊட்டி அருகேயுள்ள குருத்துக்குளி பகுதியில் கால்நடை பராமரிப்புத் துறைக்கு சொந்தமான சுமார் 90 ஏக்கர் நிலம் உள்ளது. கடந்த 2002ம் ஆண்டு இந்த நிலத்தில் ஒரே நாளில் 43 ஆயிரம் மரக்கன்றுநட்டு கின்னஸ் சாதனை புரியும் முயற்சி மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. இதன் தொடா்ச்சியாக ஒரே நாளில் 43 ஆயிரம் மரக்கன்று நடவு செய்யப்பட்டு, அந்நிகழ்ச்சி கின்னஸ் புத்தகத்திலும் இடம் பெற்றது. கின்னஸ் பார்க் என பெயரிடப்பட்ட இப்பூங்காவை சில ஆண்டுகள் பராமரித்த நிலையில் அதன் பின் மாவட்ட நிர்வாகம் பராமரிக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இப்பூங்காவில் மரக்கன்றுகள் அனைத்தும் அழிந்து போயின. அதன் பின் வனத்துறையினா் சில காலம் பராமரித்து வந்தனா். ஆண்டு தோறும் மலைப் பகுதி மேம்பாட்டு திட்டத்தின் மூலம் நிதி ஒதுக்கப்பட்டு சில மரக்கன்றுகளை நடவு செய்தனர்.
ஆனால், மான்கள் மற்றும் காட்டெருமை தொல்லைகளால் நாற்றுக்கள் அனைத்தும் அழிந்து போயின. இதனால் காலபோக்கில் வனத்துறையும் பராமாிப்பு செய்யாமல் விட்டு விட்டது. இதனால் பூங்காவில் நடவு செய்யப்பட்ட மரக்கன்றுகள் அனைத்தும் பட்டுபோய் முட்புதர்களாக மாறியது. பூங்காவை பராமாிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வந்த நிலையில், கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு தனியார் சுற்றுசூழல் அமைப்பு ஒன்று பூங்காவை பராமரிப்பு செய்யும் பணியை கையில் எடுத்தது. ஆனால் காலபோக்கில் அந்த தனியார் அமைப்பும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதை பாதியில் விட்டு விட்டது.இதனால் மரக்கன்றுகள் இன்றி கின்னஸ் பூங்கா தற்போது அந்நிய தாவரங்களின் ஆக்கிரமிப்பில் உள்ளது.ஒரே நாளில் 43 ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்து கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்ற இப்பூங்காவை மீண்டும் பொலிவு படுத்தி பராமரிக்க உரிய நடவடிக்கை எடுக்க வனத்துறையும், மாவட்ட நிர்வாகமும் முயற்சி மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தி உள்ளனர்.