திருச்சி: திருச்சி, திண்டுக்கல், நாமக்கல், கோவை உள்ளிட்ட பல மாவட்டங்களில் நியாயவிலைக் கடைகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மூடப்பட்டுள்ளன. 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளதால் வங்கிகளிலும் பணம் இல்லை. இதனால் தொடக்க கூட்டுறவு வங்கிகளின் செயல்பாடுகள் பல இடங்களில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனை கண்டித்தும், நிலைமையை சரிசெய்யக் கோரியும் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கூட்டுறவு வங்கிகளில் போதுமான நிதி இல்லாததால், பங்கு பரிவர்த்தணை செய்ய முடியாமல் வேளாண் கூட்டுறவு வங்கிகள் முடங்கியுள்ளன. இதனால் ஏழை விவசாயிகள் மற்றும் கிராமப்புற மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே இதனை கண்டித்து நிதி கேட்டு கூட்டுறவு வங்கி ஊழியர்கள், கூட்டுறவு வங்கி முன் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
இதில், இந்திய ரிசர்வ் வங்கியானது 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவித்தள்ளதால் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் 500, 1000 ரூபாய் நோட்டுக்களை பெறக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளது. எனவே கூட்டுறவு வங்கிகளில் பணபரிவர்த்தணை செய்ய முடியாமல் தமிழகத்தில் உள்ள 4544 தொடக்க வேளாண் வங்கிகள் மூடப்பட்டுள்ளது.