சென்னை: செல்லாது என்று அறிவிக்கப்பட்ட 500, 1000 ரூபாய் தாள்களின் மூலம் வரும் டிசம்பர் 30ம் தேதி வரை வங்கிகளில் செலுத்தப்படும் கணக்கில் வராத தொகைக்கு, 50 சதவீதம் வரி வசூலிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதுதவிர மீதியுள்ள பணத்தில் பாதியை 4 ஆண்டுகளுக்கு வங்கிக் கணக்கில் இருந்து எடுக்க கட்டுப்பாடு விதிக்கப்படும் என்று தெரிகிறது.
கருப்புப் பணத்தை ஒழிக்கும் முயற்சியில் முக்கிய நடவடிக்கையாக கடந்த 8-ஆம் தேதி, ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார். பொதுமக்கள் தங்களிடம் உள்ள செல்லாத ரூ.500, ரூ.1000 நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து புதிய நோட்டுகளை மாற்றிப் பெற்றுக் கொள்ளலாம் என்றும், வங்கிக் கணக்குகளில் டெபாசிட் செய்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டது.
ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட பிறகு வங்கிகளில் டெபாசிட் ஆகியுள்ள பணம் ரூ.6 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. பழைய நோட்டுகளை டெபாசிட் செய்ய இன்னும் ஒரு மாதத்துக்கு மேல் காலஅவகாசம் இருப்பதால் வங்கிகளின் டெபாசிட் தொகை மேலும் சில லட்சம் கோடிகள் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
ஜன்தன் கணக்கில் பணம்:
ஜன்தன் கணக்குகளில் இரண்டே வாரங்களில் ரூ.64,250 கோடி செலுத்தப்பட்டது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இத்தொகை கறுப்புப் பணமாக இருக்கலாம் என மத்திய அரசு சந்தேகிக்கிறது. இது தொடர்பாகவும், வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ள கணக்கில் வராத பணம் தொடர்பாகவும் எத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்வது என்றும் மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
50 சதவிகிதம் வரி:
இந்நிலையில், ரூ.2.5 லட்சத்துக்கு மேல் செலுத்தப்படும் கணக்கில் வராத தொகைக்கு அதிகப் பட்ச வரி விதிப்பதோடு, 200 சதவீதம் அபராதம் விதிப்பது குறித்து முதலில் பரிசீலிக்கப்பட்டது. ஆனால், இதற்கு வரித்துறை சட்டங்கள் அனுமதியளிக்காது என்பதால், டிசம்பர் 30ம் தேதி வரை வங்கிகளில் செலுத்தப்படும் கணக்கில் வராத தொகைக்கு 50 சதவீதம் வரி விதிக்கும் வகையில் வரிச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.
புதிய சட்டத்திருத்தம்:
டெல்லியில் வியாழக்கிழமை இரவு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதுகுறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. இச்சட்டத் திருத்தத்துக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாகவும், டெல்லி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நடப்பு குளிர்கால கூட்டத் தொடரில் இந்த புதிய சட்டத்திருத்த மசோதா அமல்படுத்தப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கணக்கில் வராத பணம்:
இதன்படி, டிசம்பர் 30ம் தேதிக்குள் 500, 1000 ரூபாய் தாள் களின் மூலம் வங்கிகளில் செலுத் தப்படும் கணக்கில் வராத தொகைக்கு 50 சதவீதம் வரை வரி வசூலிக்கப்படும். வரி பிடித்தம் போக மீதத் தொகையை 4 ஆண்டுகள் வரை வங்கிக் கணக்கில் இருந்து எடுக்கவோ, எவ்வித நிதி பரிவர்த்தனை களுக்கும் பயன்படுத்தவோ முடியாது. கணக்கில் வராத பணம் வரித்துறை அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டால், 90 சதவீதம் வரை வரி விதிக்கப்படுவதோடு, நீண்ட காலம் பயன்படுத்த முடியாத அளவுக்கு அத்தொகை முடக்கி வைக்கப்படும்.
English summary:
The government is likely to introduce an amendment to the income-tax law early next week under which people voluntarily depositing cash that can't be accounted for in banks will face a tax of 50% and have a fourth of the total locked in a zero-interest instrument for four years.