புதுடில்லி : பழைய ரூ.500, 1000 நோட்டுக்களை மாற்றுவதற்காக நாடு முழுவதிலும் வங்கிகளில் மக்கள் நீண்ட வரிசையில் குவிந்துள்ளனர்.
பழைய ரூ.500, 1000 நோட்டுக்களை இன்று முதல் வங்கிகள், தபால் நிலையங்கள் போன்றவற்றில் மாற்றிக் கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்திருந்தது. அதன்படி டில்லி, மும்பை, கோல்கட்டா, சென்னை உள்ளிட்ட நகரங்களில் வங்கிகளில் நீண்ட வரிசையில் மக்கள் குவிந்து வருகின்றனர். வங்கிகளில் மக்களின் கூட்ட நெரிசலை தடுக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களின் பழைய நோட்டுக்களை மாற்றுவதற்கு வசதியாக வங்கிகளில் கூடுதல் கவுன்ட்டர்கள் திறக்கப்பட்டுள்ளன.
அடையாள சான்றுகள்:
தமிழகம் முழுவதும் வங்கிகளில் பழைய ரூ.500, 1000 நோட்டுக்களை மாற்றிக் கொள்வதற்கான விண்ணப்ப படிவங்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து, ஏதேனும் ஒரு அடையாள சான்றை காட்டி மக்கள் தங்களின் பழைய நோட்டுக்களை மாற்றிக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பழைய நோட்டுக்களை மாற்ற ஆதார் எண், பான் எண், ரேஷன் கார்டு, ஓட்டுனர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட அடையாள சான்றுகள் தேவை.