புதிய 500 மற்றும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் நாளை முதல் புழக்கத்திற்கு விடப்படும் என்று பொருளாதார விவகாரங்களுக்கான செயலாளர் ஷக்தி காந்த தாஸ் தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியின் அறிவிப்பை அடுத்து, டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனைத் தெரிவித்தார். நாட்டின் நீண்ட கால பொருளாதார நலனை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஷக்தி காந்த தாஸ் தெரிவித்துள்ளார்.
நள்ளிரவுக்குப் பிறகு, பழைய 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை யாரேனும் வாங்கினால், அது அவர்களின் தனிப்பட்ட முடிவாகவே கருதப்படும் என்று அவர் தெரிவித்தார். இந்த நோட்டுக்கள் பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்ததாகவும், இதேபோன்று கள்ள நோட்டுக்கள் அச்சிடப்பட முடியாத வகையிலும் இருக்கும் என்று ஷக்தி காந்த தாஸ் கூறியுள்ளார்.
மேலும், புழக்கத்தில் இருக்கும் ரூபாய் நோட்டுகளுக்கு பதிலாக புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு அடையாள அட்டை அவசியம் என்றும் அவர் குறிப்பிட்ட்டார்.