அப்பல்லோ மருத்துவமனையில், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த, முதல்வர் ஜெயலலிதா, 58 நாட்களுக்கு பின், நேற்று தனி அறைக்கு மாற்றப்பட்டார்.
முதல்வர் ஜெயலலிதா, உடல் நலக் குறைவு காரணமாக, செப்., 22ல், சென்னை,அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கபட்டார்.
அவருக்கு சிகிச்சை அளிக்க, லண்டனில் இருந்து, டாக்டர் ஜான் பீலே மற்றும் டில்லி, 'எய்ம்ஸ்' மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள், அப்பல்லோ மருத்துவர்களுடன் இணைந்து, ஜெயலலிதாவுக்கு தீவிர சிகிச்சை அளித்தனர்.
இயல்பு நிலை:
அதை தொடர்ந்து, சிங்கப்பூரில் இருந்து, பிசியோ தெரபி மருத்துவர்கள் வரவழைக்கப் பட்டனர். படிப் படியாக, செயற்கை சுவாசம் அளிப்பது குறைக்கப் பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன், முதல்வர்இயல்பு நிலைக்கு திரும்பினார்; வழக்கமான உணவுகளை உட் கொண்டு வருகிறார். சமீபத்தில், பத்திரிகை யாளர்களிடம் பேசிய, அப்பல்லோ மருத்துவ
மனை தலைவர் பிரதாப் ரெட்டி, 'முதல்வர் நன்கு குணமடைந்து விட்டார்; தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து, சாதாரண வார்டுக்கு மாறுவதை, அவரே முடிவு செய்வார்' என, தெரிவித்தார்.
இரண்டாவது தளத்தில் உள்ள தீவிர சிகிச்சை பிரி வில், 58 நாட்களாக இருந்த ஜெயலலிதா, நேற்று மாலை, 5:00 மணிக்கு, அதே தளத்தில் உள்ள, தனி அறை எண், 4005க்கு மாற்றப் பட்டார்.
இந்த அறை யில், முதல்வருக்கு நடைபயிற்சி அளிப்பதற்கு தேவையான வசதி மற்றும் மருத் துவ உபகரணங்கள் உள்ளன.
அ.தி.மு.க.,வினர் மகிழ்ச்சி:
ஜெயலலிதா, தீவிர சிகிச்சைபிரிவில் இருந்து,தனி அறைக்கு மாற்றப்பட்ட தகவல் கிடைத்த தும், அ.தி.மு.க.,வினர், அப்பல்லோ மருத்துவ மனை முன் குவிந்தனர்; இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சி தெரிவித்தனர்.
English Summary:
Apollo Hospital, ICU admitted, Chief Minister Jayalalithaa, 58 days later, yesterday, a separate room has changed. Chief Minister Jayalalithaa, health hazards due to the lack, Sep., 22, Chennai, Apollo Hospital added.
He's treatment, from London, Dr. John Beale and Delhi, AIIMS 'doctors were called. They, along with Apollo Hospital, she treated me to the extreme.