புதுடில்லி : உ.பி., பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் குறித்த அறிவிப்பை ஜனவரியில் வெளியிட தேர்தல் கமிஷன் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
5 மாநில தேர்தல் :
உ.பி., பஞ்சாப், கோவா, மணிப்பூர், உத்திரகாண்ட் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டசபைகளின் பதவிக்காலம் 2017 ம் ஆண்டு முடிகிறது. கடந்த முறை இந்த மாநிலங்களுக்கான தேர்தல் தேதி 2012ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் அறிவிக்கப்பட்டு, 2013 ம் ஆண்டு துவக்கத்தில் ஓட்டுப்பதிவு நடத்தப்பட்டது. இதனால் இந்த முறை முந்தைய ஆண்டே தேர்தல் தேதியை வெளியிடாமல், தேர்தல் நடக்கும் ஆண்டிலேயே தேதியை வெளியிட தேர்தல் கமிஷன் திட்டமிட்டுள்ளது.
தேர்தல் தேதி :
இதனால் ஜனவரி 5 முதல் 15ம் தேதிக்குள் தேர்தல் தேதி வெளியிடப்பட வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. பிப்ரவரி முதல் தேர்தல் நடைமுறைகள் கையாளப்பட்டு, மார்ச் மாதத்தில் ஓட்டுப்பதிவு நடத்தப்படலாம் என கூறப்படுகிறது. உ.பி., மாநிலத்தில் அதிக தொகுதிகளும், வாக்காளர்களும் உள்ளதால் அதனை கருத்தில் கொண்டே தேர்தல் தேதி அறிவிப்பில் தேர்தல் கமிஷன் தாமதம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.
பல கட்ட தேர்தல் :
உ..பி.,யில் கடந்த முறை 7 கட்டங்களுக்கும் அதிகமாக தேர்தல் நடத்தப்பட்டது. பிப்ரவரி 8 துவங்கி மார்ச் 3 வரை அங்கு தேர்தல் நடந்தது. இம்முறை புதிய வாக்காளர்கள் பலரும் சேர்க்கப்பட்டுள்ளதால், கூடுதல் கட்டங்களாக தேர்தல் நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பாக்., ஊடுருவல் அதிகரித்து வருவதால் இம்முறை அதிக அளவில் மத்திய துணைராணுவம் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படலாம் என கூறப்படுகிறது.
English Summary:
UP assembly elections in Punjab, including 5 state election commission to publish the announcement in January that it planned to have the information released.