சென்னை: சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ள முதல்வர் ஜெயலலிதா, இன்று மாலை 5 மணிக்கு, ‛டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டு, வீடு திரும்புவார் என தகவல் வெளியாகி உள்ளது.முதல்வ
ர் ஜெயலலிதா, செப்.,22ம் தேதி இரவு உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னை, கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது. செயற்கை சுவாசம், லண்டன், சிங்கப்பூர் டாக்டர்கள் அடங்கிய குழு அளித்த தீவிர சிகிச்சையால் அவர் உடல் நலம் நன்கு தேறியுள்ளது. அப்பல்லோ மருத்துவமனை தலைவர் பிரதாப் சி ரெட்டி நேற்று அளித்த பேட்டியின் போது, ‛முதல்வர் ஜெயலலிதா நலம் பெற்றுள்ளார். வழக்கமான உணவுகளை எடுத்து வருகிறார். அவ்வப்போது தான் செயற்கை சுவாசம் அளிக்கப்படுகிறது. அவர் எப்போது வீடு திரும்புவார் என்பதை அவர் தான் முடிவு செய்ய வேண்டும். அவரது உடல் உறுப்புகள் அனைத்தும் நலம் பெற இன்னும் 7 வாரங்களாகும்' என, தெரிவித்து இருந்தார்.
இதையடுத்து அ.தி.மு.க.,வினர் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த சூழ்நிலையில் முதல்வர் ஜெயலலிதா இன்று மாலை 5 மணிக்கு மருத்துவமனையில் இருந்து, ‛டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டு, வீடு திரும்புவார் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
English Summary:
Chennai Apollo Hospital ICU included Chief Minister Jayalalithaa, today at 5 pm, 'discharged' was returning to the house as the information is released.