சிங்கப்பூர் மற்றும் துபாயில் இருந்து தமிழகத்துக்கு விமானம் மூலம் கடத்தி வரப்பட்ட 5.9 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவற்றை கடத்திவந்த 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிங்கப்பூர், துபாயில் இருந்து விமானம் மூலம் தமிழகத்துக்கு சட்ட விரோதமாக தங்கம் கடத்தி வரப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதைத் தொடர்ந்து சென்னை, திருச்சி, மதுரை விமான நிலையங் களில் அதிகாரிகள் உஷார்படுத்தப் பட்டனர். தொடர்ந்து மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் திருச்சியி லிருந்து சென்னை நோக்கி வந்த கார் ஒன்றை செங்கல்பட்டில் வைத்து மடக்கிய புலனாய்வு அதிகாரிகள் அதில் இருந்தவர்களி டம் விசாரித்தனர். அப்போது, அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தனர். இதைத் தொடர்ந்து அவர்களின் காரை சோதனை செய்தபோது அதில் சட்ட விரோதமாக தங்கம் கடத்தி வந்தது தெரிந்தது.
இதைத் தொடர்ந்து காரில் இருந்த சபீர் அகமது (29), உபயத்துல்லா (33) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கடத்தி வரப்பட்ட தங்க நகை மற்றும் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
சிங்கப்பூர் மற்றும் துபாயிலிருந்து வந்த பயணிகள் சிலர் தங்களிடம் தங்கத்தை வழங்கியதாக அவர்கள் தெரிவித்தனர். இவர்கள் கொடுத்த தகவலின் பேரில் சென்னை சூளைமேட்டில் உள்ள ராஜா முகமது (32) மற்றும் மன்சூர் (28) ஆகியோரின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டன.
அவர்களிடம் இருந்தும் தங்க கட்டிகள் மற்றும் வெளி நாட்டு நகைகள் பறிமுதல் செய்யப் பட்டன. இவர்களுடன் மேலும் 4 பேரும் தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளில் கைது செய்யப்பட் டனர். இவர்களிடமிருந்து 5.9 கிலோ தங்க நகைகள் மற்றும் தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப் பட்டன. இவற்றின் மொத்த மதிப்பு ரூ.1 கோடியே 80 லட்சமாகும்.
கடத்தி வரப்பட்ட தங்கக் கட்டிகள் மற்றும் நகைகள்.