பாட்னா:
வடமாநிலங்களில் ஆண்டுதோறும் சூரிய பகவானையும் அவரது மனைவியான உஷாதேவியையும் வழிபாடு செய்யும் ‘சாட்பூஜை’ நான்கு நாட்களுக்கு வெகு சிறப்பாக நடத்தப்படுவது வழக்கம்.அவ்வகையில், இந்த ஆண்டு சாட்பூஜைக்காக பீகார் மாநிலத்தின் டர்பங்கா மாவட்டத்தில் நடந்த சாத் திருவிழாவுக்கு ஏராளமான பெண் பக்தர்கள் வந்திருந்தனர்.
பூஜையை முடித்துவிட்டு அவர்களில் சிலர் இன்று அதிகாலை இங்குள்ள ராம்பத்ராபூர் ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்றனர். அப்போது, அந்தப்பாதை வழியாக டெல்லியில் இருந்து வேகமாக வந்த சுதந்திரா சேனானி எக்ஸ்பிரஸ் ரெயில் மோதியதில் ஆறு பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இச்சம்பவத்தால் ஆத்திரமடைந்த பக்தர்கள் ராம்பத்ராபூர் ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தின் குறுக்கே அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் இன்றுகாலை அவ்வழியாக செல்லும் பல ரெயில்களின் சேவை பாதிக்கப்பட்டது.