அமெரிக்க விமான நிலையம் ஒன்றில் பாதுகாப்பு அதிகாரியைச் சுட்டுக்கொன்ற குற்றவாளிக்கு ஆயுள் தண்டனையும், கூடுதலாக 60 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்தில் லாஸ் ஏன்ஜலிஸ் விமான நிலையத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு நடந்த துப்பாக்கி சூட்டில் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் பலியானார், மூவருக்கு பலத்த காயமேற்பட்டது.
இதையடுத்து, துப்பாக்கி சூடு நடத்திய நபரைக் கைது செய்த போலீசார் அவர் மீது வழக்கு தொடுத்தனர். கலிஃபோர்னிய நீதிமன்றத்தில் நடந்து வந்த வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட பால் ஆன்டனி குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
இதையடுத்து அவருக்கு ஆயுள் தண்டனையும், கூடுதலாக 60 ஆண்டு சிறை தண்டனையும் வித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பால் ஆன்டனிக்கு மரணதண்டனை விதிக்க கோரக்கூடாது என அவரது குடும்பத்தினர் போலீசாரிடம் விடுத்த வேண்டுகோள் ஏற்கப்பட்டதால், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.