சென்னை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து மற்றும் தொழில் வரியை பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளாக பெறுவதற்காக நேற்று திறக்கப்பட்ட 446 சிறப்பு கவுன்டர்களில் ஒரே நாளில் ரூ.7.21 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியில் வரிகளை பணமாக பெறுவதில் பல்வேறு பிரச்சினைகள் ஏற் பட்டன. அதனால் நிர்வாக கார ணங்களுக்காக, பொதுமக்களிடம் இருந்து சொத்து மற்றும் தொழில் வரிகளை நேரடியாக ரொக்கமாக வசூல் செய்யும் வழக்கத்தை, கடந்த 2002-ம் ஆண்டு மாநகராட்சி நிர்வாகம் நிறுத்திவிட்டது.
அதனைத் தொடர்ந்து, சென்னை மாநகராட்சிக்கு பொதுமக்கள் செலுத்த வேண்டிய சொத்துவரி, தொழில் வரி மற்றும் இதர வரிகளை குடிநீர் வாரிய வசூல் மையங்கள், இ-சேவை மையங்கள், மாநகராட்சி வரி வசூலிப்பாளர்கள் மூலமாக, காசோலை மற்றும் வரைவோலைகளாக வசூலிப்பது நடைமுறைப்படுத்தப்பட்டது.
மேலும் மாநகராட்சியால் அனுமதிக்கப்பட்ட இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, சிட்டி யூனியன் வங்கி, கரூர் வைஸ்யா வங்கி உள்ளிட்ட 11 வங்கிகளிலும் ரொக்கமாகவோ, வரைவோலை மற்றம் காசோலைகளாக செலுத்த லாம். மாநகராட்சி இணையதளம் மூலமாகவும் செலுத்தலாம்.
தற்போது மத்திய அரசு பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என அறிவித்துள்ள நிலையில், பொதுமக்கள் உள் ளாட்சி அமைப்புகளுக்கு செலுத்த வேண்டிய வரி மற்றும் கட் டணத்தை செலுத்துவதில் உள்ள சிரமங்களை கருத்தில்கொண்டு, மேற்கூறிய இரு ரூபாய் நோட் டுகளை பயன்படுத்தி, ஞாயிறு மற்றும் திங்கள்கிழமை (நவ.13, 14) ஆகிய இரு நாட்களுக்கு செலுத்தலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
மேலும் மாநகராட்சி ஒவ்வொரு ஆண்டும் ரூ.700 கோடி சொத்துவரி வசூலிக்க வேண்டிய நிலையில், ஆண்டுதோறும் ரூ.450 கோடி அளவிலேயே வசூலிக்க முடிகி றது. இதனால் சொத்து வரி இலக்கை எட்ட முடியாமல், மாநகராட்சி நிர்வாகம் தவித்து வந்தது. தற்போது ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை சாதகமாக பயன்படுத்திக்கொள்ளவும் மாநக ராட்சி திட்டமிட்டது.
அதனால், சென்னை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, தொழில் வரி மற்றும் இதர வரிகளை ரொக்கமாக வசூல் செய்ய மாநகராட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற் காக அனைத்து வார்டு அலு வலகங்கள், 15 மாநகராட்சி மண்டல அலுவலகங்கள், ரிப்பன் மாளிகை மற்றும் மேற்கூறிய பகுதியில் இயங்கி வரும் இ-சேவை மையங்கள் என மொத்தம் 446 கவுன்டர்கள் நேற்று திறக்கப்பட்டன. காலை 8 முதல் மாலை 6 மணி வரை இயங்கிய இந்த முகாம்களில் ஒரே நாளில் ரூ.7.21 கோடி வசூலானதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்த சிறப்பு முகாம்கள் இன்று மாலை 6 மணிக்கு மேலும் செயல்படும் என தெரிவிக் கப்பட்டுள்ளது.