சென்னை: லஞ்சம் வாங்கிய புகாரில் சென்னையில் சுங்க மற்றும் கலால் துறை முதன்மை தலைமை ஆணையர் ஜானகி அருண்குமார் மீது சி.பி.ஐ., அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சென்னையில் லஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக சி.பி.ஐ., அதிகாரிகள் 7 இடங்களில் அதிரடியாக சோதனை நடத்தினர். இதில் சுங்க மற்றும் கலால் துறை முதன்மை தலைமை ஆணையர் ஜானகி அருண்குமார் வீடு மற்றும் அலுவலகங்களிலும் சோதனை நடைபெற்றது.
சுங்கத் துறை ஊழியரிடம் பணியிட மாறுதலுக்காக ஜானகி அருண்குமார் லஞ்சம் பெற்றதாக கூறப்படுகிறது. சோதனையின் போது சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து ஐ.ஆர்.எஸ் அதிகாரியான ஜானகி அருண் குமார் மீது லஞ்ச புகாரின் பேரில் சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.
English summary:
The Central Bureau of Investigation (CBI) has filed bribes case on customs officials in chennai.