விழுப்புரம்: 500 மற்றும் 1000 ரூபாய நோட்டுகள் திரும்பப் பெறப்படும் என்று அறிவிப்பினால் சுங்கச் சாவடிகளில் கடும் வாகன நெரிசலும், வாகன ஓட்டிகள் மத்தியில் வாக்குவாதமும் ஏற்பட்டுள்ளது.
நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள சுங்கச்சாவடிகளில் 500 அல்லது 1000 ரூபாய் நோட்டுகளை கொடுத்தால் சில சுங்கச் சாவடிகளில் பெற்றுக் கொள்ள மறுப்பதால், சுங்கச் சாவடி ஊழியர்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்படுகிறது.
சில சுங்கச்சாவடிகளில் 500 ரூபாய் நோட்டுகள் பெற்றுக் கொள்ளப்பட்டாலும், வாகன ஓட்டிகளுக்கு, மீதம் சில்லறைக் கொடுப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதனால் ஏராளமான சுங்கச் சாவடிகளில் வாகன நெரிசல் ஏற்பட்டு, நீண்ட தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுக்கும் காட்சியையும் காண முடிகிறது.