புதுடில்லி : டில்லியில் அதிகரித்து வரும் காற்று மாசு காரணமாக மக்கள் கடும் அவதியடைந்துள்ளனர். ஆனால் இது தொடர்பாக டில்லி அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்கூறி முதல்வர் கெஜ்ரிவாலை காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது.
காங்., குற்றச்சாட்டு :
இது தொடர்பாக காங்., மாநில தலைவர் அஜய் மக்கான் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், டில்லியில் காற்று மாசு அபாய கட்டத்தை எட்டியுள்ளது. ஆனால் முதல்வரோ மாநிலத்துக்கு வெளியே அரசியல் ஆதாயம் தேடும் பணிகளில் ஈடுபட்டு உள்ளார். இது தொடர்பாக மாநில அரசு அறிவித்துள்ள திட்டங்கள் அனைத்தும் குறுகிய கால நடவடிக்கைகளே.
பார்ட்-டைம் முதல்வர் :
டில்லியில் காற்று மாசை கட்டுப்படுத்த மாநில அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு காங்கிரஸ் கட்சி உறுதுணையாக இருக்கும். இதற்காக நீண்டகால நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொள்ள வேண்டும். ஆனால் அது குறித்து எதுவும் அறிவிக்காத கெஜ்ரிவால் ஒரு 'பார்ட் -டைம்' முதல்வராக இருந்து வருகிறார். டில்லிக்கு முழுநேர முதல்வர் தேவை என அவர் தெரிவித்தார்.