புஜோவ்: சீன ஓபன் பாட்மின்டன் தொடரின் ஒற்றையர் பிரிவில் அசத்திய இந்தியாவின் சிந்து சாம்பியன் பட்டம் வென்றார்.
சீனாவில் உள்ள புஜோவ் நகரில், சீன ஓபன் சூப்பர் சீரிஸ் பிரிமியர் பாட்மின்டன் தொடர் நடக்கிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் இந்தியாவின் சிந்து, சீனாவின் சன் யு மோதினர். முதல் செட்டை 21-11 என கைப்பற்றிய சிந்து, இரண்டாவது செட்டை 17-21 என பறிகொடுத்தார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் கடைசி செட்டில் எழுச்சி பெற்ற சிந்து 21-11 என வென்றார். ஒரு மணி நேரம் 9 நிமிடம் நீடித்த போட்டியின் முடிவில், சிந்து 21-11, 17-21, 21-11 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று கோப்பை கைப்பற்றினார்.
முதல் முறை:
துடிப்பாக செயல்பட்ட சிந்து, 'சூப்பர் சீரிஸ்' தொடரில் முதல் முறையாக கோப்பை வென்றுள்ளார். இத்தொடரில், செய்னாவுக்குப்பின் பட்டம் கைப்பற்றிய இரண்டாவது இந்திய வீராங்கனையானார். ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்ற சிந்து, தற்போது சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
English Summary:
Series China Open badminton championships in singles and won acattiya India's Indus.