கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே ஹெலிகாப்டரில் இறங்கி கடற்கரையில் ஆய்வு மேற்கொண்ட 2 கடற்படை அதிகாரிகளை மீனவர்கள் சிறைபிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
குளச்சல் அருகே உள்ள வாணியக்குடி கடலோர கிராமத்தில் இன்று பிற்பகலில் ஹெலிகாப்டரிலிருந்து இருவர் சீருடையில் இறங்கியுள்ளனர். அவர்களிடம் பொதுமக்கள் விசாரித்தபோது, கொச்சி கடற்படை அலுவலகத்தில் இருந்து வந்துள்ளதாகவும், கடற்கரை பகுதியில் அளவீடு மேற்கொள்ளும் பணியில் ஈடுபட உள்ளதாகவும் கூறியுள்ளனர்.
இதனைத்தொடர்ந்து இருவரையும் சிறைபிடித்து குளச்சல் போலீசாரிடம் பொதுமக்கள் ஒப்படைத்தனர். ஏற்கனவே, இனயம் துறைமுகத் திட்டத்திற்கு மீனவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், புதிய ஆய்வுகள் தொடர்பாக மீனவர்கள் அச்சமடைந்து, 2 அதிகாரிகளை சிறைபிடித்துள்ளனர். பின்னர் உரிய அடையாள அட்டை மற்றும் கொச்சி கடற்படை தளத்தில் இருந்து வந்த அறிவுறுத்தலின் பேரில், இரண்டு கடற்படை அதிகாரிகளை போலீசார், கொச்சிக்கு அனுப்பி வைத்தனர்.
English Summary:
The helicopter came down near Colachel in Kanyakumari district 2 Naval officers and fishermen on the beach, which investigated the incident caused uproar captives.