டரன்டரன்: ஜம்மு காஸ்மீர் மாநிலம் கே.ஜி எல்லைப்பகுதியில், நேற்று தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் இந்திய வீரர் குருசேவக் சிங் வீரமரணமடைந்தார். அவரது உடலுக்கு பஞ்சாப் மாநிலத்தின் டரன்டரன்
என்ற இடத்தில் இறுதி சடங்கு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பலர் கலந்து கொண்டு வீரமரணமடைந்த இந்திய வீரருக்கு அஞ்சலி செலுத்தினர்.
முன்னதாக ஜம்மு காஷ்மீரில் எல்லைக்கட்டுப்பாடு கோடு அருகே பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் 2 ராணுவ வீரர்கள் பலியானார்கள். 3 பேர் காயமடைந்தனர். எல்லையில் 2 ஊடுருவல் முயற்சி முறியடிக்கப்பட்டது. ஜம்மு காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாடு கோடு அருகே பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தனது தாக்குதலை தொடர்ந்து வருகிறது. இதற்கு இந்திய தரப்பில் வீரர்கள் சரியான பதிலடி கொடுத்து வருகின்றனர்.
பூஞ்ச் மாவட்டம் கிருஷ்ணாகதி செக்டார் பகுதியில் 2 முறை தீவிரவாதிகளின் ஊடுருவல் முயற்சி நடந்தது. பாகிஸ்தானின் அத்துமீறிய தாக்குதல் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட இந்த ஊடுருவல் முயற்சியை இந்திய வீரர்கள் முறியடித்தனர். இதனால் பாகிஸ்தானின் நிலைகளும் சேதமடைந்ததாக கூறப்படுகிறது. ஊடுருவலை முறியடிக்க முயன்றபோது பஞ்சாப் மாநிலம் டரன்டரன் பகுதியை சேர்ந்த வீரர் குர்சேவாக் சிங் என்று அடையாளம் காணப்பட்டது.
காஷ்மீரில் வன்முறை பரவுவது தற்போது குறைந்துள்ளதாலும், நிலவரம் இன்னும் மோசமான நிலையில்தான் உள்ளது. தற்போது 250 முதல் 300 தீவிரவாதிகள் காஷ்மீரில் உள்ளனர். எல்லையில் தீவிரவாத ஊடுருவல் தொடர்ந்து நடப்பது கவலை அளிக்கிறது. அதனால் இன்னும் இரண்டு, 3 மாதங்களுக்கு நாம் கண்காணிப்புடன் இருக்க வேண்டும்.
வன்முறையாளர்களால் எரிக்கப்பட்ட 70 கட்டிடங்களில் 53 கட்டிடங்கள் முற்றிலும் நாசமாகிவிட்டன. காஷ்மீரில் இயல்பு நிலை ஏற்பட்டதுபோல் தோன்றினாலும், நிலவரம் திருப்தி அளிக்கும் நிலையில் இல்லை. சமூக விரோதிகளுக்கு எதிராக போலீசார் தொடர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.