பாஜகவைத் தவிர பெரும்பாலான கட்சிகளில் அடுத்த தலைவர் யார்? என்பது ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டுவிட்டது என்று பாஜகவின் தேசியத் தலைவர் அமித் ஷா கூறினார்.
மற்ற கட்சிகளைப் போல், குடும்ப ஆதிக்கமின்றி, செயல்பாட்டை முன்வைத்து இயங்கும் கட்சி பாஜக மட்டுமே என்றும் அவர் கூறினார்.
உத்தரப் பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, லக்னெளவில் உள்ள தனியார் பல்கலைக்கழகம் ஒன்றில் மாணவர்களுடன் அவர் கலந்துரையாடும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. அதில், பிரதமர் மோடி தலைமையிலான அரசின் பல்வேறு நலத் திட்டங்களை எடுத்துரைத்த அவர், காங்கிரஸ், சமாஜவாதி, பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகளை விமர்சிக்கும் வகையில் அவர் பேசியதாவது:
பெரும்பாலான கட்சிகள், குடும்பக் கட்சியாகச் சிறுத்துவிட்டன. அந்தக் குடும்பத்தில் மகன் ஒருவன் பிறந்துவிட்டால், அந்தக் கணமே அந்தக் கட்சியின் அடுத்த தலைவர் அவர்தான் என்பது முடிவு செய்யப்பட்டு விடுகிறது. காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவர் யார் என்பதை இப்போதே நீங்கள் கூற முடியும். ஆனால், பாஜகவின் அடுத்த தலைவர் யார் என்பதை முன்கூட்டியே நீங்கள் கூற முடியுமா?
பெரும்பாலான அரசியல் கட்சிகள், தங்களது பொறுப்புகளை விட்டு விட்டு, ஜாதியம், குடும்ப அரசியல் என்று தங்களது எல்லைகளை சுருக்கிக் கொண்டுவிட்டன.
இந்த நாடு செயல்பாடு மிக்க அரசியலை நோக்கிச் செல்ல வேண்டும் என்று பாஜக விரும்புகிறது.
கருப்புப் பண விவகாரத்தில், யாரும் தப்பித்துவிட முடியாது. பிரதமர் மோடி தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்து, "கருப்புப் பணத்தை ஒழிப்பதாக அளிக்கப்பட்ட வாக்குறுதி என்னவாயிற்று?' என்று எதிர்க்கட்சிகள் கேள்வியெழுப்பின.
ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று மத்திய அரசு அறிவித்த பிறகு, அந்த அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும் என்று அதே கட்சிகள் கூக்குரலிடுகின்றன.
ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அதிரடி அறிவிப்பால் எதிர்க்கட்சிகள் விரக்தியில் உள்ளன. இந்த விவகாரத்தில் காங்கிரஸ், சமாஜவாதி, பகுஜன் சமாஜ் கட்சி, ஆம் ஆத்மி, திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒருமித்த குரலில் எதிர்ப்பு தெரிவிக்கின்றன.
உத்தரப் பிரதேசத்தை சமாஜவாதி கட்சியும், பகுஜன் சமாஜ் கட்சியும் மாறி மாறி ஆட்சி செய்ததால், சட்டம்-ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துவிட்டது. இந்த மாநிலத்தில் பாஜகவால் மட்டுமே மாற்றத்தை ஏற்படுத்த முடியும். அந்த மாற்றத்தை தேர்தல் திருவிழாவில் இளைஞர்கள் ஏற்படுத்த வேண்டும் என்றார் அவர்.
English Summary:Except BJP, can guess the next director/leader of the other parties, Said Amit Shah