புதுடில்லி : பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாள் அரசு முறை பயணமாக இன்று(நவ.,10) ஜப்பான் புறப்பட்டு செல்கிறார். அவரது இப்பயணத்தில் இருநாடுகளுக்கிடையே அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அரசு முறை பயணம்:
பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாள் அரசு முறை பயணமாக இன்று ஜப்பான் சென்றார். அங்கு நடைபெறும் இருநாடுகள் இடையிலான வரும் 10-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை நடைபெற உள்ள வருடாந்திர மாநாட்டில் கலந்து கொள்கிறார். அவருடன் அதிகாரிகள் குழுவும் செல்கிறது. ஜப்பான் மன்னர் அகிடிடோவை மோடி சந்திக்கிறார்.
புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்:
நவ.,11ம் தேதி ஜப்பான் பிரதமர் ஜின்சோ அபேயை சந்தித்துப் பேசும் மோடி, பொருளாதாரம், ராணுவம், அறிவியல் ஆய்வு ஆகிய துறைகளில் செய்ய வேண்டிய பணிகள் குறித்து விவாதிக்க உள்ளார். இருநாடுகளுக்கிடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
புல்லட் ரயில் :
அந்நாட்டுப் பிரதமர் அபேவுடன் புகழ்பெற்ற ஷிண்கன்சென் புல்லட் ரயில் மூலம் கோபே நகருக்கு மோடி பயணிக்க உள்ளார். மேலும், அதிவேக ரயில்களை உற்பத்தி செய்யும் கவாஸகி ரயில் தொழிற்சாலை வளாகத்துக்கும் மோடி செல்கிறார். மேலும் இருநாடுகளுக்கிடையே அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.