ரூபாய் நோட்டு விவகாரத்தால் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ள நடுத்தர மக்களைக் கவரும் விதமாக பல்வேறு சலுகைகளுடன் மத்திய பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
கருப்புப் பணம், கள்ள நோட்டுகளை ஒழிக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, நாடு முழுவதும் பெருமளவில் புழக்கத்தில் இருந்த ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி கடந்த 8-ஆம் இரவு அறிவித்தார்.
எந்த முன்னறிவிப்புமின்றி திடீரென இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதால், நாட்டில் பணத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வங்கிகளிலும், ஏடிஎம் மையங்களிலும் பணத்தை எடுப்பதற்காக நாள்தோறும் மக்கள் நீண்டநேரம் காத்திருக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.
மேலும், வங்கிகளில் போதிய பண இருப்பு இல்லாததாலும், பணம் எடுப்பது தொடர்பான மத்திய அரசின் அன்றாட அறிவிப்புகளாலும் பொதுமக்கள் அதிருப்தியில் உள்ளனர். குறிப்பாக, இந்த விவகாரத்தில் நடுத்தர மக்கள்தான் அதிக அளவில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
சலுகைகளுடன் பட்ஜெட்: இந்நிலையில், மக்களின் இந்த அதிருப்தியானது மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுக்கு எதிராக திரும்பிவிடக் கூடாது என்பதில் ஆட்சியாளர்கள் கவனமாக உள்ளனர்.
எனவே, ரூபாய் நோட்டு விவகாரத்தால் பெருமளவில் பாதிக்கப்பட்டிருக்கும் நடுத்தர வர்க்கத்தினரைக் கவரும் வகையில் சில சலுகைகளுடன் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகலவறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், உத்தரப் பிரதேசம், கோவா, பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களுக்கு முன்னதாகவே இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுவிடும் என்பதால் மக்களின் ஆதரவும் பாஜகவுக்கு கிடைக்கும் எனவும் மத்திய அரசு நம்புகிறது.
என்னென்ன சலுகைகள்? முன்னெப்போதும் இல்லாத வகையில், முன்கூட்டியே பிப்ரவரி மாதத்தின் முதல் வாரத்தில் பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது. இந்த பட்ஜெட்டில் வருமான வரி செலுத்துவதற்கான உச்ச வரம்பு ரூ.2.50 லட்சத்திலிருந்து ரூ.3.50 லட்சமாக உயர்த்தப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. நாடு முழுவதும் உள்ள நடுத்தர மக்களின் நீண்டகால கோரிக்கை இது என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல், வீட்டு வாடகை குறைப்புக்கான உச்ச வரம்பினை உயர்த்துதல், வீட்டுக் கடனுக்கு ரூ.50 ஆயிரம் விலக்கு அளித்தல் போன்ற சலுகைகளும் பொது பட்ஜெட்டில் இருக்கும் என பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.
English Summary :Currency note issues are directly affected by the medium-populist manner the various offers with the federal public budget will be reported.
Black money, counterfeit notes to abolish part of the process across the country, largely in circulation Rs 500, Rs 1000 notes that annulled the Prime Minister Narendra Modi in the last 8 Johnson announced the night.