உயர் மதிப்புடைய ரூபாய் நோட்டுகளை செல்லாதவையாக அறிவித்து, மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கையால் கருப்புப் பணத்தை பறிகொடுத்தவர்கள்தான், நாடாளுமன்றத்தை செயல்பட விடாமல் முடக்குகின்றனர் என்று மத்திய ஜவுளித் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி சனிக்கிழமை குற்றம்சாட்டினார்.
ரூபாய் நோட்டு விவகாரம் தொடர்பாக வாக்கெடுப்புடன் கூடிய விவாதம் நடத்த வலியுறுத்தி, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் கடந்த 2 நாள்களாக அமளியில் ஈடுபட்டன. இதனால், இரு அவைகளிலும் வழக்கமான அலுவல் எதுவும் நடைபெறவில்லை. இந்நிலையில், குஜராத் மாநிலம், ஆமதாபாதில் சனிக்கிழமை நிகழ்ச்சியொன்றில் பங்கேற்பதற்காக வந்த மத்திய ஜவுளித் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கருப்புப் பணம் பதுக்கியவர்கள், ஊழலில் திளைத்தவர்கள், ஏழை மக்களின் பணத்தை சுரண்டியவர்கள் ஆகியோருக்கு எதிரான நடவடிக்கையின் ஒரு பகுதியாகவே, உயர் மதிப்புடைய ரூபாய் நோட்டுகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டன.
மத்திய அரசின் வரலாற்று சிறப்புமிக்க இந்த நடவடிக்கையால் கருப்புப் பணத்தை பறிகொடுத்தவர்கள்தான், நாடாளுமன்றத்தை செயல்பட விடாமல் முடக்குகின்றனர். அரசியல் வேறுபாடுகளை ஒதுக்கிவிட்டு, நாட்டின் நலனுக்காக ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.
பழைய பணத்தை மாற்றுவதற்காக சிரமத்தை பொறுத்துக் கொண்டு வங்கிகள் முன் நீண்ட வரிசையில் காத்திருக்கும் அனைவருமே, ஊழலுக்கு எதிரான போர்ப் படையினரே. கருப்புப் பணத்துக்கு எதிரான பிரதமர் மோடியின் அழைப்பை முழு மனதுடன் ஏற்றுக் கொண்ட அவர்களுக்கு, நாடே நன்றிக் கடன்பட்டுள்ளது என்றார்
ஸ்மிருதி இரானி.
English Summary: Disables the Parliament of black money lost: Smriti Irani.
Banknote issue and vote with the debate, urging lawmakers in both houses of the Congress-led opposition over the past 2 days replenish . Thus, both the houses and there was the usual desk. In this case, Gujarat, Ahmedabad Saturday program, attended the Union Textiles Minister Smriti Irani, journalists told the