மூன்று தொகுதிகளின் தேர்தல் முடிவு, தமிழக கட்சிகளிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில், சட்டசபை பொதுத்தேர்தலின் போது, வாக்காளர்களுக்கு அதிகளவில் பணம் கொடுக்கப்பட்டதாக, புகார் எழுந்தது; அதன்படி, தஞ்சாவூர் மற்றும் அரவக்குறிச்சி தொகுதியில், தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.
நேரடி போட்டி :
அந்த இரு தொகுதிகளுக்கும், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., சீனிவேல் மறைவு காரணமாக காலி யான, திருப்பரங்குன்றம் தொகுதிக்கும், நேற்று தேர்தல் நடந்தது. மூன்று தொகுதிகளிலும், ஆளுங்கட்சியான, அ.தி.மு.க., வுக்கும், எதிர்க் கட்சியான, தி.மு.க.,வுக்கும் இடையே, நேரடி போட்டி நிலவியது.
இடைத்தேர்தல் பார்முலா படி, அமைச்சர்கள், மூன்று குழுக்களாக பிரிந்து, மூன்று தொகுதிகளிலும் முகாமிட்டு, தேர்தல் பணிகளை கவனித்தனர். முதல்வர் மருத்துவமனையில் இருந்தாலும், மக்கள், அ.தி.மு.க., பக்கம் என்பதை நிரூபிக்க, துடிப்புடன் செயல் பட்டனர்.
சட்டசபை பொதுத்தேர்தலில், 89 இடங்களில் வெற்றி பெற்று, மிகப்பெரிய எதிர்க்கட்சியாக, தி.மு.க., உரு வெடுத்துள்ளது. இடைத்தேர்தலில், ஒரு தொகுதி யிலாவது வெற்றி பெற வேண்டும் என்றநோக்கில், ஆளுங்கட்சிக்கு இணையாக, தி.மு.க.,வினரும் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
திருப்பரங்குன்றத்தில், அ.தி.மு.க.,வுக்கு செல்வாக்கு அதிகம். தஞ்சாவூர், அரவக்குறிச்சியில், உறுதியாக கூற முடியாத நிலை என்பதால், ஒன்றிலாவது வெற்றி பெற்று, தன் தலைமையை நிரூபிக்க வேண்டும் என, ஸ்டாலின் களமிறங்கினார். எனவே, இரு கட்சிகளும் வெற்றியை எதிர்பார்த்தபடி உள்ளன.
மூன்றாம் இடத்திற்கு அதேபோல, பா.ஜ., - தே.மு. தி.க., ஆகியவை, மூன்று தொகுதிகளிலும், பா.ம.க., இரு தொகுதியிலும் வேட்பாளர்களை நிறுத்தியிருந் தன. இக்கட்சிகள் இடையே, மூன்றாம் இடத்தை பிடிக்க போட்டி இருந்தது. இந்நிலையில், மூன்று தொகுதிகளிலும், நாளை மறுநாள் ஓட்டு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
3 சதவீத ஓட்டு யாருக்கு? :
அரவக்குறிச்சி தொகுதியில், வெற்றியை நிர்ணயிக் கும், மூன்று சதவீத ஓட்டு யாருக்கு செல்லும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த, 2006ல், அ.தி.மு.க., கூட்டணியில், ம.தி.மு.க., போட்டியிட்ட போது, தி.மு.க., விடம், 2,825 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
2009 லோக்சபா தேர்தலில், தி.மு.க.,வை விட, அ.தி.மு.க., 6,139 ஓட்டுகள் கூடுதலாக பெற்றது. கடந்த, 2011 சட்டசபை தேர்தலில், தி.மு.க., 4,541 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றது; 2014 லோக்சபா தேர்தலில், தி.மு.க.,வை விட, அ.தி.மு.க., 6,995 ஓட்டுகள் அதிகம் பெற்றது. அதாவது, பதிவான ஓட்டுகளில், இந்த வித்தியாசம் வெறும், மூன்று சதவீதம் தான்.
இந்த தேர்தல்கள் அனைத்திலும், 3 சதவீத ஓட்டுகளே, வெற்றியை நிர்ணயிப்பதாக இருந் துள்ளன. எனவே, இந்த தேர்தலில், வெற்றியை நிர்ணயிக்கும், மூன்று சதவீத ஓட்டு யாருக்கு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
English Summary:
The results of the elections in three constituencies, Tamil Nadu has great expectations of the parties.In Tamil Nadu, during the assembly elections, in which voters were given the money, the complaint arose; Accordingly, Thanjavur and Aravakurichi constituency, the election was postponed.