வாஷிங்டன் : உலகமே அதிகம் எதிர்பார்க்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் நாளை (நவம்பர் 8) நடக்கிறது. இதனால் வேட்பாளர்களான ஹிலாரி, டிரம்ப் இருவரும் உச்சக்கட்ட பிரசாரத்தை தீவிரப்படுத்தி உள்ளனர்.
நாளை தேர்தல் :
இந்த தேர்தலில் 14 கோடியே 63 லட்சத்து 11 ஆயிரம் பேர் ஓட்டு போட தங்களை பதிவு செய்து கொண்டுள்ளனர். அவர்களில் 69 சதவீதம் பேர் நிச்சயம் இந்த தேர்தலில் ஓட்டு போடப்போவதாக உறுதி அளித்துள்ளனர். ஏற்கனவே சுமார் 4 கோடி பேர் முன்கூட்டியே ஓட்டு போடும் வசதியை பயன்படுத்தி, ஓட்டு போட்டுவிட்டனர். அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளரான ஹிலாரிக்கு ஆதரவாக பிரசாரம் செய்து வரும் தற்போதைய அதிபர் ஒபாமா, ஏற்கனவே தனது ஓட்டை செலுத்தி விட்டார். இருப்பினும் அவர் யாருக்கு ஓட்டளித்தார் என வெளியிட மறுத்து விட்டார்.
இறுதி கட்ட பிரசாரம் :
இந்த தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனுக்கும் (வயது 68), குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்புக்கும் (70) இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. கருத்துக்கணிப்புகள் ஹிலாரிக்கு சாதகமாக அமைந்தாலும், இருவருக்கும் இடையேயான ஆதரவு வித்தியாசம் குறைவாக இருக்கிறது. எனவே வாக்காளர்களை இறுதிக்கட்டமாக கவருவதில் இருவரும் போட்டி போட்டுக்கொண்டு, உச்சக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஹிலாரி தனது பிரசாரத்துக்கு பாப் பாடகிகள் பியான்சே, கேத்தி பெர்ரி ஆகியோரை பயன்படுத்தி வருகிறார். டிரம்ப், நட்சத்திர பேச்சாளர்கள் யாரும் இல்லை என்பதால் அவர் தனது குடும்பத்தினரை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுத்தி உள்ளார். கடைசியாக 'மெக்கிளாட்சி மாரிஸ்ட்' கருத்துக்கணிப்பு முடிவு வெளியாகி இருக்கிறது. இதில் ஹிலாரிக்கு 44 சதவீத ஆதரவும், டிரம்புக்கு 43 சதவீத ஆதரவும் இருப்பது தெரிய வந்துள்ளது.