சென்னை: முதல்வர் ஜெயலலிதா உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதால் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார்; அவர் எழுந்து நடப்பதுதான் அடுத்த நிலை என்று அப்பல்லோ மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டி தெரிவித்துள்ளார்.
சென்னை தரமணியில் பிரதாப் ரெட்டி இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டு அங்கு சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன.
ஜெயலலிதாவின் அனைத்து உறுப்புகளும் நன்றாக செயல்படுகின்றன. ஜெயலலிதாவின் உடலுக்கு பிசியோதெரபி சிகிச்சை கொடுக்கப்பட்டதால் இயல்பு நிலைக்கு அவர் திரும்பியுள்ளார்.
வழக்கமான உணவுகளை அவர் எடுத்துக் கொள்கிறார். இனி அவர் எழுந்துநடப்பதுதான் அடுத்த கட்ட நிலையாகும்.
இவ்வாறு பிரதாப் ரெட்டி கூறினார்.
English Summary:
Apollo Hospital chairman Dr Prathap C Reddy said that Tamilnadu CM Jayalalithaa was shifted to Normal ward from ICU.