புதுடில்லி: கறுப்பு பணத்தை வெளிக்கொண்டு வர 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை திரும்ப பெற்றுக்கொண்டது. இதனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் சங்கம்லால் பாண்டே மற்றும் ஒருவர் சுப்ரீம் கோர்ட்டில் பொது நல வழக்கு தொடர்ந்தார். மத்திய அரசின் நடவடிக்கை பொது மக்களை பாதிக்கிறது. திட்டத்தை செயல்படுத்த கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் எனக்கூறியிருந்தார்.
இதனையடுத்து மத்திய அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், பொது நல வழக்கு மீது உடனடியாக எந்த உத்தரவையும் பிறப்பிக்க வேண்டாம். அதற்கு முன்னர் மத்திய அரசின் கருத்தை கேட்க வேண்டும் எனக்கூறப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இந்த மனு மீதான விசாரணையை வரும் செவ்வாய்க்கிழமைக்கு தள்ளி வைத்து கோர்ட் உத்தரவிட்டது.