வாஷிங்டன்: நமக்கு நல்ல அதிபர் வர வேண்டும். பெண்களை பன்றிகள் என்று சொல்பவர் அல்ல என அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா டிரம்ப் பற்றி தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் களத்தில் உள்ள டொனால்ட் டிரம்ப் மீது ஏகப்பட்ட பாலியல் புகார்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் டெம்பியில் நடந்த பேரணியில் கலந்து கொண்ட ஜனநாயக கட்சி அதிபர் வேட்பாளரான ஹில்லாரி கிளிண்டன் கூறுகையில், டிரம்ப் அதிபராகிவிட்டார் என்று கற்பனை செய்யுங்கள். அவர் அதிபராகி உங்கள் வாழ்க்கையை பாதிக்கும் முடிவுகளை எடுக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அவர் ட்விட்டர் போருக்கு பதிலாக உண்மையான போரையே துவங்குவார் என்றார்.
டிரம்ப் பெண்களை அவமதிப்பவர் என்று தொடர்ந்து கூறி வருகிறார் ஹில்லாரி. இந்நிலையில் வடக்கு கரோலினாவில் உள்ள ராலேவில் நடந்த பேரணியில் பேசிய ஒபாமா கூறுகையில், குடியரசுக் கட்சி வேட்பாளர் ஏமாற்றுபவர். அதிபர் மாளிகைக்கு வர தகுதியில்லாதவர். அமெரிக்கா மக்களை கொடுமைப்படுத்த வேண்டும் என்று யோசனை சொல்பவர் அதிபர் ஆகக் கூடாது. பிரபலமாக இருக்கும் காரணத்தால் பாலியல் தொல்லைகள் கொடுத்துவிட்டு தப்பிப்பவரின் குரலை கேட்க விரும்புகிறீர்களா? பெண்களை பன்றிகள், நாய்கள் என்று யார் கூறுவார்கள்? அந்த குரல் அமெரிக்காவில் குரல் அல்ல. அமெரிக்காவுக்காக தனது வாழ்வை அர்ப்பணித்தவர் ஹில்லாரி. அவர் தான் அடுத்த அதிபராக வேண்டும். அவர் தான் சரியான நபர் என்றார்.
நமக்கு நல்ல அதிபர் வர வேண்டும். பெண்களை பன்றிகள் என்று சொல்பவர் அல்ல என அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா டிரம்ப் பற்றி தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் களத்தில் உள்ள டொனால்ட் டிரம்ப் மீது ஏகப்பட்ட பாலியல் புகார்கள் எழுந்துள்ளன.
Friday 4 November 2016
Home »
» பெண்களை பன்றிகள் என்பவர் நமக்கு அதிபராக வேண்டாம்: டிரம்ப் மீது ஒபாமா பாய்ச்சல்