மதுரை: தனுஷ் தங்களின் மகன் என திருப்புவனத்தை சேர்ந்த தம்பதி தொடர்ந்த வழக்கில் நேரில் ஆஜராகுமாறு தனுஷுக்கு மேலூர் குற்றவியல் நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.
சிவகங்கை அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் டைம்கீப்பராக உள்ளார் கதிரேசன். அவரது மனைவி மீனாட்சி. கடந்த 2002ம் ஆண்டு பிளஸ் 1 படித்துக் கொண்டிருந்த தங்களின் மகன் கலையரசன் தங்களை பிரிந்து சென்றுவிட்டதாகவும், அவர் தான் தனுஷ் என்ற பெயரில் படங்களில் நடிப்பதாகவும் தெரிவித்தனர்.
இதை தனுஷும் அவரது தந்தையுமான கஸ்தூரி ராஜாவும் மறுத்தனர். இந்நிலையில் கதிரேசன் இது தொடர்பாக மதுரை மாவட்டத்தில் உள்ள மேலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் வரும் ஜனவரி மாதம் 12ம் தேதி நேரில் ஆஜராகுமாறு தனுஷுக்கு சம்மன் அனுப்பியுள்ளது.
தனுஷ் தங்களின் மகன் என்று கூறுவதால் கஸ்தூரி ராஜா குடும்பத்தார் தங்களை மிரட்டுவதாகவும் கதிரேசன் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
English summary :
Melur court has sent summons to actor Dhanush in conection with a case filed by a couple from Thiruppuvanam claiming him to be their son.