அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி தொகுதியில், தி.மு.க.,வினர் புகாரை தொடர்ந்து அ.தி.மு.க., பூத் ஏஜன்ட்கள் வெளியேற்றப்பட்டனர். மே மாதம் நடந்த சட்டசபை தேர்தலின் போது, தஞ்சை மற்றும் அரவக்குறிச்சியில், பண பட்டுவாடா புகார் காரணமாக தேர்தல் நிறுத்தப்பட்டது.
இதை தொடர்ந்து நவ.,19ம் தேதி தேர்தல் நடக்கும் என அறிவிக்கப்பட்டு, தற்போது ஓட்டுப்பதிவு நடந்து வருகிறது. அ.தி.மு.க., சார்பில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, தி.மு.க., சார்பில் கே.சி.பழனிச்சாமி ஆகியோர் போட்டியிடுகின்றனர். இங்கு, பள்ளப்பட்டியில் ஓட்டுச்சாவடி எண் 221, 231ல் அ.தி.மு.க., பூத் ஏஜன்ட்கள் வெளியேற்றப்பட்டனர்.
‛அ.தி.மு.க., பூத் ஏஜன்ட்கள் வெளியூரை சேர்ந்தவர்கள்' என, தி.மு.க., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் புகார் தெரிவித்தன. புகாரை அடுத்து அ.தி.மு.க., பூத் ஏஜன்ட்கள் ஜோசப், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் வெளியேற்றப்பட்டனர்.
English Summary:
Aravakurichi constituency, DMK, AIADMK continue to report staggering, Booth agents expelled. During the Assembly elections in May, the town and Aravakurichi, cash payment complaint has been terminated due to the election.