புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதி இடைத்தேர்தலுக்காக காங்கிரஸினர் பணப்பட்டுவாடா செய்வதாக கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற பாஜகவினரை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
நெல்லித்தோப்பில் வரும் 19-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.இதனையொட்டி, காங்கிரஸ் வேட்பாளர் முதல்வர் நாராயணசாமி மற்றும் அதிமுக வேட்பாளர் ஓம்சக்தி சேகர் உள்ளிட்டோர் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், வாக்காளர்களுக்கு காங்கிரஸ் கட்சியினர் பணப்பட்டுவாடா செய்வதாக கூறி பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனர். பின்னர் அவர்கள், துணை தேர்தல் நடத்தும் அதிகாரி தில்லைவேலிடம் புகார் அளித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற அவர்கள் அனைவரும் காவல்துறையினரால் பின்னர் கைது செய்யப்பட்டனர்.