சென்னை: இந்து சமய அறநிலையத் துறையில் காலியாக உள்ள செயல் அலுவலர் பணியிடங்களுக்கான தேர்வு தேதியை டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறையில் செயல் அலுவலர் நிலை-3ல் 29 காலிப் பணியிடங்கள் மற்றும் செயல் அலுவலர் நிலை-4ல் 49 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இதற்கான டி.என்.பி.எஸ்.சி. தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. செயல் அலுவலர் நிலை 3 பணியிடங்களுக்கு ஏப்ரல் 29-ம் தேதி முற்பகல் (முதல் தாள்) மற்றும் பிற்பகலில் (இரண்டாம் தாள்) தேர்வு நடைபெறுகிறது.
செயல் அலுவலர் நிலை 4 பணியிடங்களுக்கு ஏப்ரல் 30-ம் தேதி முற்பகல் (முதல் தாள்) மற்றும் பிற்பகலில் (இரண்டாம் தாள்) தேர்வு நடைபெற உள்ளது.
இந்த தேர்வுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கடைசி நாள் டிசம்பர் 24-ம் தேதி ஆகும். வங்கிகள் மூலம் தேர்வுக்கட்டணத்தை டிசம்பர் 27-ம் தேதிக்குள் செலுத்தவேண்டும். இரண்டு பதவிகளுக்கும் விண்ணப்பிக்க விரும்புவோர் தனித்தனியாக தேர்வுக் கட்டணம் செலுத்த வேண்டும். தேர்வு மற்றும் விண்ணப்பதாரர்களுக்கான தகுதிகள் குறித்த மேலும் தகவல்களை www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary:
TNPSC exam date announced to fill the vacancies for Group III, IV Leval