திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடாவில் வெளி மாவட்ட அ.தி.மு.க.,வினர் ஈடுபடுவதாக தி.மு.க.,வினர் புகார் தெரிவித்தனர். 'பிரச்னையை பெரிதாக்க வேண்டாம்,' என உள்ளூர் அ.தி.மு.க.,வினர் கேட்டு கொண்டதால் உள்ளூர் தி.மு.க.,வினர் சமரசம் ஆகினர்.
ஐராவதநல்லுார் ராஜாநகரில் வெளி மாவட்டத்தை சேர்ந்த அ.தி.மு.க.,வினர் வாக்காளர்களுக்கு ஓட்டளிக்க பணம் பட்டுவாடா செய்வதாக கூறி, தி.மு.க.,வினர் அவசர போலீஸ் 100 க்கு தகவல் தெரிவித்தனர். போலீஸ் வர காலதாமதம் ஏற்பட்டது. இந்நிலையில் கல்லம்பல் ரோட்டில் ஆர்.சி., துவக்கப்பள்ளி ஓட்டிச்சாவடியை பார்வையிட சென்ற மண்டல தேர்தல் அதிகாரி கண்ணதாசன் வாகனத்தை, தி.மு.க.,வினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அவர் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். அவரது உத்தரவுப்படி ராஜாநகருக்கு போலீசார் குழுவாக சென்றனர். இதையறிந்த வெளிமாவட்ட அ.தி.மு.க., வினர் 'எஸ்கேப்' ஆகினர். அ.தி.மு.க.,வினர், போராட்டம் நடத்திய தி.மு.க.,வினரை அழைத்து 'உள்ளூரில் இருக்கும் நமக்குள் பிரச்னை வேண்டாம். பேசி தீர்த்து கொள்வோம்,' என கேட்டு கொண்டனர். இதை தி.மு.க.,வினர் ஏற்று கொண்டனர். இதையடுத்து இருதரப்பினருக்கும் இடையே சமரசம் ஏற்பட்டது. பணப்பட்டுவாடா பிரச்னை 'கப்சிப்' ஆனது.
English Summary:
Delivery of money to voters outside the district in Thiruparankundram AIADMK and DMK are engaging staggering, staggering complained. 'I do not want to enlarge the issue, "the local Digg, had requested the local congressman, staggering, staggering became compromised.