இந்தியாவில் அபரிமிதமாக பெருகிவரும் சீனப் பொருட்கள் இறக்குமதியை கட்டுப்படுத்த இந்தியா நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
சீனப் பொருட்களின் இறக்குமதி இந்தியாவில் அதிகரித்து வரும் வேளையில் அவற்றின் தரம் சிறப்பாக இல்லை என்பது ஊரறிந்த விஷயமாகி விட்டது. ஒரு சில சீன தயாரிப்பு பொருட்கள் தரமானவையாக இருந்தாலும் ஒட்டு மொத்தத்தில் இந்தியர்களிடையே தற்போது அதிருப்தியை மட்டுமே சம்பாதித்துள்ளது.
பிராந்திய பொருளாதார உடன்படிக்கை
RCEP எனும் பிராந்திய விரிவான பொருளாதார உடன்படிக்கையில் இந்தியா, ஆஸ்திரேலியா, சீனா, ஜப்பான், கொரியா நியூசிலாந்து நாடுகள் கையெழுத்திட்டன. இதன்படி மேற்கண்ட ஆறு நாடுகளும் தங்களுடைய பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில், ஏற்றுமதி, இறக்குமதி, முதலீடு , தொழில் நுட்ப பரிமாற்றம் போன்றவற்றில் ஒத்துழைக்க முடிவு செய்தன.
அதிகரித்த சீனப் பொருட்கள்
ஒப்பந்தத்தின் படி இந்தியா மற்றும் சீன இடையேயான வர்த்தகம் அதிகரித்தாலும். சீனாமிக அதிக அளவில் தன்னுடைய உற்பத்திப் பொருட்களை இந்தியாவில் இறக்குமதி செய்துவருகிறது. சென்ற 2015 - 2016 ஆண்டில் மட்டும் சீனாவிலிருந்து 62 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு பொருட்கள் இறக்குமதி ஆகின. ஆனால் இந்தியாவிலிருந்து வெறும் 9 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான பொருட்கள் மட்டுமே சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. இதனால் இந்தியா சீனா இடையேயான ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகத்தில் 53 பில்லியன் டாலர்கள் அளவுக்கு வித்தியாசம் நிலவி வருகிறது.
இறக்குமதியை கட்டுப்படுத்த
இந்தியாவில் சீனப் பொருட்களின் இறக்குமதியை கட்டுப்படுத்த இறக்குமதியாகும் சீனப் பொருட்கள் மீதான வரிச் சலுகைகளை அடியோடு ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே தற்போது சீனப்பொருட்களுக்கு அளிக்கப்பட்டு வரும் மூன்றடுக்கு இறக்குமதி வரிச் சலுகைகளை அடியோடு ரத்து செய்வதன் மூலம் இந்தியா சீன இடையே நிலவும் வர்த்தக பின்னடைவு சரியாக வாய்ப்பு உள்ளதாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
Friday 4 November 2016
Home »
» சீனப்பொருட்கள் இறக்குமதியை கட்டுபடுத்த இந்தியா நடவடிக்கை