காற்றையும் பதஞ்சலி நிறுவனம் உற்பத்தி பொருளாக அறிமுகப்படுத்தும் என உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ தனது டுவிட்டர் பக்கத்தில் கிண்டலாக பதிவிட்டுள்ளார்.
புதுதில்லியில் கடந்த ஒரு வாரகாலமாக காற்று மாசு என்பது பெரும் பிரச்சனையாக உள்ளது. இதனால் புதுதில்லிவாசிகள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர். தீப ஒளி பண்டிகையையொட்டி அதிகமான வெடிபொருட்கள் பயன்படுத்தப்பட்டதும் ஒரு காரணம் என்று கூறப்படுகிறது.
இந்த காற்றுமாசு பிரச்சனை குறித்து தொடர்ந்து புகார் அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கார்ப்பரேட் சாமியார் பாபா ராம்தேவ் தில்லிவாசிகளுக்கு தூய காற்றை கொடுக்க முடியும் என்று கூறியுள்ளார்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மார்கண்டேய கட்ஜூ, “டெல்லி வாழ் மக்கள் காற்று மாசுபாடு குறித்து ஏன் புகார் தெரிவிக்கிறார்கள் என்று தெரியவில்லை. காற்று சுத்தப்படுத்துவதற்காக பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் ஏதேனும் ஒரு தயாரிப்பை அறிமுகப்படுத்தலாம்” என்று கிண்டலாக தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், “ஒரு வேளை ஜெர்மானிய வல்லுனர்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டு தூய காற்றை சிலிண்டர்களில் அடைத்து தனது பதஞ்சலி நிறுவனத்தின் உற்பத்திப் பொருளாக அறிமுகப்படுத்தினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
ஆனால் இந்தியர்களால் தில்லி நகரம் முழுவதும் தூய காற்று அடைக்கப்பட்ட சிலிண்டர்கள் நகரத்தை நிரப்பிட முடியாது. இது கார்ப்பரேட் காலமல்லவா? இயற்கை தூய்மை என்ற பெயரால் மிஞ்சியிருக்கும் காற்றின் வளத்தையும் விற்கும் காலம் நெருங்குகிறது” எனவும் தெரிவித்துள்ளார்.