விஜயவாடா; சிறுநீரக கோளாறு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள, வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜுக்கு, தன் சிறுநீரகத்தை தானமாக வழங்க, தெலுங்கு தேச எம்.பி., முன்வந்துள்ளார்.
மருத்துவமனையில் சுஷ்மா:
வெளியுறவு அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான சுஷ்மா சுவராஜ், 64, சிறுநீரக கோளாறு காரணாக, டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு, 'டயாலிசிஸ்' சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்கான சோதனைகளை, டாக்டர்கள் மேற்கொண்டு உள்ளனர்.
தானம் வழங்க தயார்:
இந்நிலையில், அவருக்கு, தன்
சிறுநீரகத்தை தானமாக வழங்க, தெலுங்கு தேச எம்.பி., ராயபதி சாம்பசிவ ராவ் முன்வந்துள்ளார்.
இது குறித்து, சுஷ்மாவுக்கு கடிதம் எழுதிய அவர், கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது: சிறந்த அமைச்சராகவும், வெளியுறவுத்துறை அமைச்சராகவும் பறியாற்றி வரும் சுஷ்மா சுவராஜ் மிகச் சிறந்த தலைவர். தங்களுக்கு ஏற்பட்டுள்ள உடல்நலக் குறைவு குறித்து கேள்விப்ட்டு மிகவும் வருந்துகிறேன். சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக எனது சிறுநீரகத்தை தானமாக கொடுக்க விரும்புகிறேன். அதனை தாங்கள் ஏற்றுக்கொண்டால் மிகவும் மகிழ்ச்சி. இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
English Summary:
Who are suffering from kidney failure, to the Foreign Minister Sushma Swaraj, her offer to donate a kidney, Telugu Desam MP, come forward.