உயர் மதிப்புடைய ரூபாய் நோட்டுகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்ட நடவடிக்கையின் பின்விளைவுகள் நீண்ட காலத்துக்கு தொடரும் எனவும், இந்த முடிவை மேற்கொள்ளும் முன் தலைமைப் பொருளாதார ஆலோசகரிடம் மத்திய அரசு கலந்தாலோசித்ததா? என்ற சந்தேகம் எழுவதாகவும் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, அவர் மும்பையில் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியதாவது: நாட்டில் புழக்கத்திலிருந்த 86 சதவீத ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன. இதனால் ஏற்பட்டுள்ள முதல் நிலை தாக்கங்களை நாம் கண்கூடாகப் பார்த்து வருகிறோம். பெரும்பாலான மக்கள் மிகக் குறைவான பணத்தை வைத்து வாழும் நிலை உள்ளதால், பொருள்களின் நுகர்வு குறைந்துள்ளது. காய்கறிகள், பழங்கள் உள்ளிட்டவை விற்பனையாகாமல் இருக்கின்றன. இன்னும் பல வாரங்களுக்கு இந்த நிலை தொடரும்.
திருப்பூர், சூரத் உள்ளிட்ட தொழில் நகரங்களில், இரண்டாம் நிலை தாக்கங்கள் ஏற்பட்டுள்ளன. அதாவது, தொழிலாளர்கள் வேலையிழப்பு, ஆள்குறைப்பு உள்ளிட்ட பிரச்னைகள் தலைதூக்கியுள்ளன. உரம் வாங்குவதற்கு விவசாயிகளிடம் பணமில்லை. விவசாயத் தொழிலாளர்களுக்கும் கூலி தர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மத்திய அரசின் நடவடிக்கையால் ஏற்பட்டுள்ள இழப்புகளை, இப்போதே அளவிட்டுக் கூற முடியாது.
இந்த விவகாரம் தொடர்பாக, தற்போதைய மத்திய அரசில் உள்ள ஒரே ஒரு அறிவார்ந்த பொருளாதார வல்லுநரான அரவிந்த் சுப்பிரமணியனிடம் (தலைமைப் பொருளாதார ஆலோசகர்) மத்திய அரசு கலந்தாலோசனை நடத்தியதா? என்பதே எனது சந்தேகமாகும்.
ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டதால், பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமங்கள் இன்னும் 50 நாள்களில் தீரும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். இந்த 50 நாள்களில் தனிநபர்களிடம் பணத் தட்டுப்பாடு தீருமேயன்றி, இதர பிரச்னைகள் தீராது.
உதாரணமாக, எண்ணிக்கை அடிப்படையில் மொத்தமாக 2,200 கோடி ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டுள்ளன. நம் நாட்டிலுள்ள உள்ள அச்சகங்கள் மூலம் மாதத்துக்கு 300 கோடி ரூபாய் நோட்டுகளையே அச்சிட முடியும். 2,200 கோடி ரூபாய் நோட்டுகளை புதிதாக அச்சிட 7 மாதங்கள் ஆகும் என்றார் ப.சிதம்பரம்.
English Summary :The action will continue in the long-term consequences of the withdrawal bill.The former Finance Minister P Chidambaram said the emergence of the doubt.
In this regard, he told reporters in Mumbai on Saturday said 86 percent of the banknotes in circulation in the country, have been withdrawn. We're seeing evidence of the impact of the first stage.