புதுடில்லி: டில்லியில் நடந்த பொருளாதார ஆசிரியர்கள் மாநாட்டில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கலந்து கொண்டார்.
அப்போது அவர் ரூபாய் நோட்டுக்கள் வாபஸ் பெற்றுக்கொண்டது தொடர்பாக கூறியதாவது:
பாதிப்பு கிடையாது:
நாட்டு நலனுக்காக அரசு இந்த துணிச்சலான நடவடிக்கையை எடுத்துள்ளது. முடிவை எடுக்க மத்திய அரசு பயப்படவில்லை. ரூபாய் நோட்டு வாபஸ் மிக முக்கியமான நடவடிக்கை . அரசின் முடிவு எடுக்கும்ஆற்றலை நிலைநிறுத்துவது சவாலானது வங்கிகளில் சிறிய அளவில் டெபாசிட் செய்பவர்களுக்கு பாதிப்பு இருக்காது. மக்களின் அவசர தேவைக்கான பணத்தேவையை நாங்கள் புரிந்து கொண்டுள்ளோம்.
கவலைப்பட வேண்டாம்:
அதிகளவில் கருப்பு பணம் வைத்துள்ளவர்கள் தான் கவலைப்பட வேண்டும். சில நாட்களுக்கு சிறிய தொகை செலவிடுபவர்களுக்கு பிரச்னைகள் இருக்கலாம். போதிய அவகாசம் இருப்பதால் மக்கள் கவலைப்பட தேவையில்லை. தேவைக்கேற்ப வங்கிகளின் வேலை நேரத்தை கூட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பணத்தை மாற்றிக்கொள்ள வார இறுதி நாட்களிலும் வங்கி திறந்திருக்கும்.இந்த நடவடிக்கை நீண்ட கால பாதிப்பை ஏற்படுத்தும். பழைய நோட்டுகளை விரைவாக மாற்றித்தர அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது எனக்கூறினார்.