புதுடில்லி : இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த ஒருவர் தானமாக அளிக்க முன்வந்த சிறுநீரக
ம் தொடர்பாக நன்றி தெரிவித்து கருத்து வெளியிட்டுள்ள மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ், 'சிறுநீரகங்களில் மத அடையாளம் கிடையாது' என தெரிவித்துள்ளார்.மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ், சிறுநீரக கோளாறு காரணமாக டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருக்கு மாற்று சிறுநீரகங்கள் பொறுத்துவதற்கான ஏற்பாடுகளும் நடந்து வருகிறது. இந்நிலையில் சுஷ்மாவுக்கு சிறுநீரகம் வழங்க பலரும் முன்வந்துள்ளனர்.தனக்கு சிறுநீரகத்தை தானமாக தர முன்வந்த நண்பர்களுக்கு தனது டுவிட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்திருந்த சுஷ்மா சுவராஜ், மருத்துவமனையில் இருந்து விரைவில் வீடு திரும்புவேன் என்றும் நம்பிக்கையுடன் கூறியிருந்தார்.இந்நிலையில், இஸ்லாமியர்களான நியமத் அலி ஷேக், ஜான் ஷா மற்றும் முஜிப் அன்சாரி ஆகியோரும் நேற்று சுஷ்மா சுவராஜுக்கு தங்களது சிறுநீரகங்களை தானமாக வழங்க முன்வந்துள்ளனர். இவர்களில் தனது விருப்பத்தை சுஷ்மாவுக்கு 'டுவிட்டர்' மூலம் தெரிவித்திருந்த உத்தரப்பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த முஜிப் அன்சாரி, 'நான் பகுஜன் சமாஜ் கட்சியின் ஆதரவாளர். ஆனால், நீங்கள் எனக்கு தாய் போன்றவர். உங்களுக்கு எனது இரு சிறுநீரகங்களையும் தானமாக அளிக்க விரும்புகிறேன். அல்லாஹ் உங்களுக்கு அருள் புரியட்டும்' என குறிப்பிட்டுள்ளார்.இதற்கு நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்து தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ள சுஷ்மா சுவராஜ், 'மிக்க நன்றி சகோதரர்களே.., சிறுநீரகத்துக்கு மதமுத்திரைகள் கிடையாது என்பதை நான் நிச்சயமாக நம்புகிறேன்' என தெரிவித்துள்ளார்.
English Summary:
Islamic faiths offered to donate a kidney to the opinion issued by the Federal Minister Sushma Swaraj thanked, 'kidneys have no religious identity, "he said